(3099)
எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்
செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,
அம்மாவடியென் வேண்டுவதீதே.
பதவுரை
|
கைம்மா துன்பம் கடிந்த பிரானே |
– |
கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! |
|
நின் |
– |
தேவரீருடைய |
|
செம் |
– |
சிவந்த |
|
மா |
– |
மேன்மை தங்கிய |
|
பாதபற்பு |
– |
பாதபத்மங்களை |
|
தலை |
– |
என் தலையிலே |
|
ஒல்லை |
– |
சீக்கிரமாக |
|
சேர்ந்து |
– |
சேர்க்கப்பெறறால் |
|
எமர்வீடு திற |
– |
மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும் |
|
செப்பம் |
– |
பிரஸ்தாவிக்கமாட்டோம் |
|
அம்மா |
– |
ஸ்வாமியே! |
|
அடியேன் வேண்டுவது |
– |
நான் பிரார்த்திப்பது |
|
ஈதே |
– |
இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லையென்கிறார். பாசுரந் தொடங்கும்போதே எம்மாவீட்டுத் திறமும் செப்பம் என்கிறார்- தம்முடைய அத்யவஸாயத்தின் உறைப்பை உபக்ரமத்திலேயே நன்குகாட்டுகிறபடி. ‘எம்முடைய’ என்னும் பொருள்தான் சுட்டு அது என்றுணர்க. எல்லாப் படியாலும் விலக்ஷணமான மோக்ஷணத்தைக் கொடுத்தாலும் வேண்டா, என்றபடி.
செப்பம் என்றது தன்மைப் பன்மையெதிர்மறை வினைமுற்று; செப்போம் என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி-“ஒரு தமிழன் ‘எம்மாவீட்டு விகல்பமும் செவ்வியவாம்’ என்றான்; அந்த பக்ஷத்திலே வீட்டு விகல்பமாவது, ஸாலோக்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய மென்கிறவை; செவ்வியவாகையாவது ஸாலோக்யாதிகளெல்லாம் இம்மோக்ஷத்திலே யுண்டாகை” என்றுள்ளது. இதுவொரு நிர்வாஹம், திருப்பாவையில் “செப்பமுடையாய்” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும் உள்ளவிடங்களிலே செப்பம் என்பது பெயர்ச்சொல்லாகவுள்ளதன்றோ; அப்படியே இங்கும் இருப்பதாகக்கொண்டு இந்த நிர்வாஹம். இப்போது செப்பம் என்பதற்கு’ நன்றாக வுள்ளது’ என்று கருத்துத் தேறும். நின் செம்மாபாதபற்பை என் தலைமேல் சேர்த்தால், நான்கு விதமர்ன மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும், என்பது தேர்ந்த கருத்து.
பாதபற்பு-பாதபத்மம். ‘பத்மம்’ என்னும் வட சொல் பற்பு எனத் திரிந்தது.
English Translation
My Lord, you ended Gajendra’s woes! I seek no heaven for myself. Grant me your lotus-red feet to wear on my head, Quick!
