(3082)

(3082)

வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்

காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,

தூமனத்தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்

தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே.

 

பதவுரை

என் சிரிதானே

எனது திருமாலே!

வாமனன் என்று

வாமன மூர்த்தியே யென்று சொல்லியும்

என் மரதகம் வண்ணன் என்று

மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும்

தாமரைக் கண்னினன் என்று

புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும்

காமனை பயந்தாய் என்று

மன்மதனை மகனாகப் பெற்றவனே யென்று சொல்லியும்.

உன் கழல்

உன் திருவடிகளில்

பாடி பணிந்து

பாடிவணங்கி

தூ மனத்தனன் ஆய்

பாரிசுத்தமர்ன மனத்தையுடையேனாய்

பிறவி துழதி நீங்க

பிறபித்துயரம் தீரும் படியாக

என்னை தீ மனம் கெடுத்தாய்

என்னைத் தீயமனம் அற்றவனாக ஆக்கினாய்;

உனக்கு

இப்பெரு நன்றி செய்தவுனக்கு

என் செய்கேன்

என்ன கைம்மாறு செய்வேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்கை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார்.

முன்பெல்லாம் திருநாமஞ் சொல்லுவதென்றால் வேப்பங்கஷாயம் குடிப்பது போல் வெறுத்துக்கிடந்த நான், இப்போது ஒரு நொடிப்பொழுதும் இடை வீடின்றி, வாமனனே! என் மரதகவண்ணனே! புண்டாரிகாக்ஷனே! காமன் தன் தந்தையே! என்றிப்படிப் பலபல திருநாமங்களையே சொல்லி உன் திருவடிகளைப்பாடியே பணிந்து, ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாத சுத்தமர்ன ஹ்ருதயத்தையுடையேனாய், இனியொருநாளும் ஸம்ஸாரபந்தம் நேராதபடியாகப் பழைய தீயமனம் கெட்டுப்போம்படி பண்ணியருளினாயே!. இங்ஙனே பண்ணின வுபகாரத்தின் கனத்தைப் பார்த்தாலோ ஏதேனுமொரு கைம்மாறு செய்தல்லது தாரிக்க மாட்டுகின்றிலேன்; என்ன கைம்மாறு செய்வதென்று மறிகிலேன்; திருமகள் கொழுநனாய் அவாப்த ஸம்ஸ்தகாமனாயிருக்கின்ற வுனக்கு, சூத்ரனான நான் செய்யத்தக்க தொன்றுமில்லையே! என்றாராயிற்று.

முதலடியிலுள்ள பதங்களெல்லாம் அண்மை விளிகள். ருக்மிணிப் பிராட்டியினிடத்து மன்மதனுடைய அம்சமாகப் பிறந்த ப்ரத்யும்நனுக்குப் கண்ணபிரான் தந்தையாதலால் காமனைப் பயந்தாய்! என்றது.

துழதி- அலமாப்பு, ஆயாஸம்.

“என்னைத் தீமனங் கெடுத்தாய்” என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போவே உன்னையுமுகந்து சூத்ர விஷயங்களையுமுகக்கும் போல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்”.

 

English Translation

Singing, ‘Vamana’, ‘O My gem-hued Lord of lotus eyes, O Father of Kama” and many such names I worshipped you. You made my heart pure, and rid me of my birth pains.  O My Sridhara, what can I do for you?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top