(3083)
சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே.
பதவுரை
|
என் இரு டீ கேசனே |
– |
அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே! |
|
சிரி இதான் என்று |
– |
ஸ்ரீதரனே! என்றும் |
|
செய்ய தாமரை கண்ணன் என்று |
– |
செந்தாமரைக் கண்ணனே! என்றும் |
|
இரா பகல் |
– |
இரவும் பகலும் |
|
வாய் வொரி இ |
– |
வாய் பிதற்றி |
|
அலமந்து |
– |
சுழன்று |
|
கண்கள் நீர்மல்கி |
– |
கண்களில் நீர்ததும்பப் பெற்று |
|
வெம் உயிர்த்து உயிர்த்து |
– |
வெப்பமாக நெடுமூச் செறிந்து |
|
மாரி இய தீவினை மாள |
– |
சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும் |
|
இன்பம் வளர |
– |
ஆனந்தம் பெருகும்படியாகவும் |
|
வைகல் வைகல் |
– |
ஷணந்தோறும் |
|
உன்னை |
– |
உன்னை |
|
என் உள் |
– |
என் நெஞ்கினுள்ளே |
|
இரி இவைத் தனை |
– |
இருத்திவைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார். இப்பாசுரத்தைப் பூருவர்கள் நிர்வஹிக்கிறபடி ஒருவகை; பட்டர் நிர்வஹிப்பது ஒரு வகை. மூன்றாமடியில் “மாரிஇய தீவினைமாள” என்றிருப்பதை முன்னிரண்டடிகளோடு ஸம்பந்தப்பட்டதாகக் கொள்ளாமல் உரைத்தார்களாம் பூருவர்கள்; அதாவது-என்னிடத்தில் மருவியிருந்த தீவினைகளெல்லாம் மாளும்படி நீ அநுக்ரஹம் செய்ததனாலே, சிரிதரன் செய்யதாமரைக் கண்ணன் என்றென்று இரவும் பகலும் வாய்வெருவிக்கொண்டு கண்ணீர்சொரிவதும் பெருமூச்சுவிடுவதுமா யிருந்து கொண்டு, இப்படிப்பட்ட பக்திப்பேரின்பம் க்ஷணந்தோறும் வளர்ந்து செல்லும்படியாக உன்னை யென்னுள் வைத்தனை, என்பதாக முன்னோர்கள் நிர்வஹிக்கும்படி. இதனால் முன்னிரண்டடிகளிற் கூறப்பட்டுள்ள விஷயம் ஆழ்வார்க்கு இந்தப்பாசுரம் பேசும் ஸமயத்திலிருப்பதாக நிர்வஹிக்கின்றமை விளங்கும். வாய் வெருவுவதும் அலமருவதும் கண்ணீர்மல்கப் பெறுவதும் வெவ்வுயிர்க் கொள்வதுமாகிய இவை இன்பமாகக் கூடுமோவெனில், ஆழ்வார்பக்தி பரவசராகையாலே இந்த நிலைமை இவர்க்குக் தேஹயாத்ரா சேஷமாய் நித்தியமாக இருக்கக்கூடியதாகையாலே இவை இன்பமாகக் குறையில்லை யென்பதும், பூருவர்களின் திருவுள்ளம். ஆக, முன்னடிகளிற் கூறப்பட்ட விஷயம் ‘திவினைமாள்’ என்பதிலேயல்லாமல் இன்பம் வளர வென்பதிலே அந்வயிப்பதாகப் பூருவர்கள் நிர்வஹித்தாத்களென்றதாயிற்று.
இனி, பட்டருடைய நிர்வாஹமெங்ஙனே யென்னில் முன்னடிகளிற் சொல்லப்பட்டிருக்கின்ற வாய்வெருவுதல் முதலியவை, ஆழ்வார்க்கு இப்போதுள்ளவையல்ல. வாய்வெருவியும் அலமந்தும் கண்ணீர்மல்கியும் வெவ்வுயிர்த்துயிர்த்தும் இருந்த விச்லேஷவ்யஸநம் மாளவும், இன்பம் வளரவும், உன்னை யென்னுள் வைத்தனையென்பதாக. தீவினை யென்றது பிரிவாற்றாமை முன்னடிகளில் சொற்போக்கினால் நன்கு தெரிகின்றது. அங்கு “இவயிராப்பகல் வாய்வொரிஇ” என்றது; இங்கு “என்றென்றிராப்பகல் வாய்வொரிஇ” என்கிறது. அங்கு “எங்கும் நாடி நாடி” என்றது; இங்கு “அலமந்து” என்கிறது. அங்கு “தனகுவளையொண்கண்ண நீர்கொண்டாள்” என்றது; இங்கு “கண்கள் நீர்மல்கி” என்கிறது. அங்கு “உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்” என்றது; இங்கு “வெவ்வுயிர்த்துயிர்த்து” என்கிறது. ஆகவிப்படி மருவிய தீவினைமான- என்று அந்வயித்துப் பொருளுரைப்பர் பட்டர்.
இப்பாட்டில் அடிதோறும் முதற்சொற்களில் இசை நோக்கிய அளபெடை, ஹ்ருஷீகேசன் என்னும் வடசொல் இருடீகேசனெனத் திரியும். ஹ்ருஷீகமென்று இந்திரியங்களுக்குப் பெயர் அவற்றுக்கு ஈசன்-நியாமகன் என்றபடி.
English Translation
I chanted ‘Sridhara’, ‘My lotus-eyed Lord” and many other names night and day, prating madly, depressed, with tears in my eyes and breathing holly, You rid me of my store of karmas, and gave me yourself. Then you planted yourself in my heart for all times. My Hrishikesava!
