(3044)

(3044)

இரக்கமனத்தோ டெரியணை,

அரக்குமெழுகு மொக்குமிவள்,

இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,

அரக்கனிலங்கை செற்றீருக்கே.

 

பதவுரை

இரக்கம் மனத்தோடு

நெகிழ்ச்சியையுடைய நெஞ்சோடு (கூடிய)

இவள்

இப்பெண்பிள்ளை

எரி அணை

நெருப்போடு ஸம்பந்தப்பட்ட

அரக்கும்

(வன்மையான) அரக்கையும்

மெழுகும்

மெழுகையும்

ஒக்கும்

ஒத்திருக்கின்றாள்;

இரக்கம் எழீர்

(இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்;

அரக்கன்

இராவணனுடைய

இலங்கை

லங்காபுரியை

செற்றீருக்கு

(ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு

இதற்கு

இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு

என் செய்தேன்

என்ன பாரிஹாரம் பண்ணுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார்ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று  இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.

இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடையவிவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகுபோலே உருகாநின்றாள்.  இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமெழீர்; இதற்கு என்ன செய்வேன்? உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக பாழ்படுத்திவைத்தீரே! பக்ஷபாதச் செயல் செய்யாதே கொள்ளும் என்கிறாள்.

 

English Translation

She melts for you like wax if a fire, Lord who destroyed Lanka’s demon-haunt!  You do not let your compassion rise. Alas!  What can I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top