(3044)
இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே.
பதவுரை
|
இரக்கம் மனத்தோடு |
– |
நெகிழ்ச்சியையுடைய நெஞ்சோடு (கூடிய) |
|
இவள் |
– |
இப்பெண்பிள்ளை |
|
எரி அணை |
– |
நெருப்போடு ஸம்பந்தப்பட்ட |
|
அரக்கும் |
– |
(வன்மையான) அரக்கையும் |
|
மெழுகும் |
– |
மெழுகையும் |
|
ஒக்கும் |
– |
ஒத்திருக்கின்றாள்; |
|
இரக்கம் எழீர் |
– |
(இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்; |
|
அரக்கன் |
– |
இராவணனுடைய |
|
இலங்கை |
– |
லங்காபுரியை |
|
செற்றீருக்கு |
– |
(ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு |
|
இதற்கு |
– |
இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு |
|
என் செய்தேன் |
– |
என்ன பாரிஹாரம் பண்ணுவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரானே! நீர்ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகிபோல்வார்ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்கவிட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.
இரக்கமே வடிவெடுத்தாற்போலிருக்கின்ற நெஞ்சையுடையவிவள் நெருப்போடே சேர்ந்த அரக்கும் மெழுகுபோலே உருகாநின்றாள். இவளுடைய நிலையோ இது; நீரோ இரக்கமென்பது சிறிதுமில்லாம லிருக்கிறீர். உம்மைப்போலே இவளும் இரக்க மற்றவளாக இருக்கும்படி செய்துவிட்டால் இடையில் நான் துடிக்க வேண்டியதில்லை; இவளோ இரக்கமனத்தினள்; நீரோ இரக்கமெழீர்; இதற்கு என்ன செய்வேன்? உம்முடைய இரக்கந்தவிர வேறொன்றால் போக்கக்கூடியதாக இல்லையே இவளுடைய வருத்தம். வேறு எதைச்செய்வேன் நான்? ‘நாம் யாருக்கும் யாதொரு காரியமும் செய்வதில்லை; என்று நீர்சொல்வதற்கும் இடமில்லாதபடி ஒரு பிராட்டிக்காக பாழ்படுத்திவைத்தீரே! பக்ஷபாதச் செயல் செய்யாதே கொள்ளும் என்கிறாள்.
English Translation
She melts for you like wax if a fire, Lord who destroyed Lanka’s demon-haunt! You do not let your compassion rise. Alas! What can I do?
