(3040)

(3040)

களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,

ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,

துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,

அளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.

 

பதவுரை

களிப்பும்

அல்ப ஸந்தோஷமும்

கவர்வும்

மனக்கவலையும்

அற்று

ஒழிந்து

பிறப்பு

ஜன்மதமும்

பிணி

வியாதிகளும்

மூப்பு

கிழத்தனமும்

இறப்பு

மரணமும்

அற்று

ஒழிந்து

ஒளிக் கொண்ட சோதியம் ஆய்

ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத்தருவ

தான ஒளியுருவையுடையோமாய்.

துளிக்கின்ற

மழைபொழிகின்ற

வான்

ஆகாசத்தையும்

இ நிலம்

இந்தப் பூமியையும்

சுடர்

ஒளிமிக்க

ஆழி சங்கு

திருவாழி திருச்சங்குகளை

ஏந்தி

தாங்கி

அளிக்கின்ற

ரக்ஷரித்தருள்கின்ற

மாயன் பிரான்

ஆச்சரீரய சேஷ்டிதனான பரம புருஷனுடைய

அடியார்கள்

பக்தர்களினுடைய

குழாங்களை

கூட்டங்களை

உடன் கூடுவது

சேர்த்து அநுபவிக்கப்பெறுவது

என்று கொல்

என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை;  ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்கவேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமர்குமோ? என்கிறார்.

தமக்கு நிவர்த்திக்கவேண்டியவற்றை முதலடியில் அருளிச்செய்கிறார்;  களிப்பு கவர்வு பிறப்பு பிணி மூப்பு இறப்பு ஆகிய இவை அற்றுப்போக வேணுமென்கிறார்.  களிப்பாவது இந்நிலத்தில் ஏதேனும் அல்ப வஸ்துக்கள் நமது கையில் கிடைக்கும்போது அதனாலுண்டாகும் அற்ப மகிழ்ச்சி , கவர்வாவது—- கையில் கிடைத்த அந்த அல்ப வஸ்துக்கள் நஷ்டமாய்விட்டால் அதனாலுண்டாகும் மனசு கவலை , ஆகிய இவையிரண்

டும் இந்தப் பாழும் சரீரர முள்ளவரையில் இடையறாது அநுவர்த்திக்குமாதலால் சரீரர ஸம்பந்தம் தொலையவேணுமென்கிறார்.

பிறப்புத் தொலையவேணுமென்று ஒன்றைச் சொன்னால் போதுமே;  பிணி மூப்பு முதலியவற்றைத் தனியே சொல்லவேணுமோ வென்னில்; அவற்றில் ஆழ்வார்தமக்குள்ள ஜிஹாஸையை வ்யக்தமர்கக் காட்டினவாறென்க.  ஒளிக் கொண்ட சோதியம் ஆய்ஸ்ரீரஜோ குணமும் தமோகுணமும் கலசின இந்த உடம்பு போலல்லாமல் சுத்த ஸத்வமயமாய் அளவுகடந்த தேஜோரூபமான சரீரரத்தையுடையோமாகி என்றபடி.  “சோதியுமாய்” என்று பலரும் பதிப்பித்திருப்பதும் ஓதிவருவதும் பிழை; சோதியம் என்ன வேணும்.

“உடன்கூடுவதென்றுகொலோ” என்ற விதற்குப் பாட்டின் இறுதியிலே அந்வயம், “அடியார்கள் குழர்ங்களை உடன்கூடுவது என்றுகொலோ” என்று இயைக்க.  யாருடைய அடியார்களென்னில் மாயப்பிரானுடைய அடியார்கள்;  அவன் எப்படிப்பட்டவனென்னில் துளிக்கின்றவான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்றவன்—மழை பெய்யுமிடமான ஆகாசத்தையும், பெய்த மழையினால் பயனளிக்குமதான இந்நிலத்தையும் ரக்ஷரித்தருள்

பவனென்கை.

சுடராழி சங்கேந்தி=திருவாழி திருச்சங்குகள் பரமபதத்தில் ஆபரணமாய்க் காட்சி தரும்; இந்நிலத்தில் ஆயதமர்யிருந்து காரியஞ்செய்யும் என்ப.

 

English Translation

He is a radiant body of light; the Earth and sky are his.  He bears the radiant conch and discus, and protects us all, pleasure, pain and the fourfold vices departing. When, O, when will I join his band of devotees!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top