(3040)
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள் குழாங்களையே.
பதவுரை
|
களிப்பும் |
– |
அல்ப ஸந்தோஷமும் |
|
கவர்வும் |
– |
மனக்கவலையும் |
|
அற்று |
– |
ஒழிந்து |
|
பிறப்பு |
– |
ஜன்மதமும் |
|
பிணி |
– |
வியாதிகளும் |
|
மூப்பு |
– |
கிழத்தனமும் |
|
இறப்பு |
– |
மரணமும் |
|
அற்று |
– |
ஒழிந்து |
|
ஒளிக் கொண்ட சோதியம் ஆய் |
– |
ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத்தருவ |
|
தான ஒளியுருவையுடையோமாய். |
||
|
துளிக்கின்ற |
– |
மழைபொழிகின்ற |
|
வான் |
– |
ஆகாசத்தையும் |
|
இ நிலம் |
– |
இந்தப் பூமியையும் |
|
சுடர் |
– |
ஒளிமிக்க |
|
ஆழி சங்கு |
– |
திருவாழி திருச்சங்குகளை |
|
ஏந்தி |
– |
தாங்கி |
|
அளிக்கின்ற |
– |
ரக்ஷரித்தருள்கின்ற |
|
மாயன் பிரான் |
– |
ஆச்சரீரய சேஷ்டிதனான பரம புருஷனுடைய |
|
அடியார்கள் |
– |
பக்தர்களினுடைய |
|
குழாங்களை |
– |
கூட்டங்களை |
|
உடன் கூடுவது |
– |
சேர்த்து அநுபவிக்கப்பெறுவது |
|
என்று கொல் |
– |
என்றைக்கோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்கவேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமர்குமோ? என்கிறார்.
தமக்கு நிவர்த்திக்கவேண்டியவற்றை முதலடியில் அருளிச்செய்கிறார்; களிப்பு கவர்வு பிறப்பு பிணி மூப்பு இறப்பு ஆகிய இவை அற்றுப்போக வேணுமென்கிறார். களிப்பாவது இந்நிலத்தில் ஏதேனும் அல்ப வஸ்துக்கள் நமது கையில் கிடைக்கும்போது அதனாலுண்டாகும் அற்ப மகிழ்ச்சி , கவர்வாவது—- கையில் கிடைத்த அந்த அல்ப வஸ்துக்கள் நஷ்டமாய்விட்டால் அதனாலுண்டாகும் மனசு கவலை , ஆகிய இவையிரண்
டும் இந்தப் பாழும் சரீரர முள்ளவரையில் இடையறாது அநுவர்த்திக்குமாதலால் சரீரர ஸம்பந்தம் தொலையவேணுமென்கிறார்.
பிறப்புத் தொலையவேணுமென்று ஒன்றைச் சொன்னால் போதுமே; பிணி மூப்பு முதலியவற்றைத் தனியே சொல்லவேணுமோ வென்னில்; அவற்றில் ஆழ்வார்தமக்குள்ள ஜிஹாஸையை வ்யக்தமர்கக் காட்டினவாறென்க. ஒளிக் கொண்ட சோதியம் ஆய்ஸ்ரீரஜோ குணமும் தமோகுணமும் கலசின இந்த உடம்பு போலல்லாமல் சுத்த ஸத்வமயமாய் அளவுகடந்த தேஜோரூபமான சரீரரத்தையுடையோமாகி என்றபடி. “சோதியுமாய்” என்று பலரும் பதிப்பித்திருப்பதும் ஓதிவருவதும் பிழை; சோதியம் என்ன வேணும்.
“உடன்கூடுவதென்றுகொலோ” என்ற விதற்குப் பாட்டின் இறுதியிலே அந்வயம், “அடியார்கள் குழர்ங்களை உடன்கூடுவது என்றுகொலோ” என்று இயைக்க. யாருடைய அடியார்களென்னில் மாயப்பிரானுடைய அடியார்கள்; அவன் எப்படிப்பட்டவனென்னில் துளிக்கின்றவான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்றவன்—மழை பெய்யுமிடமான ஆகாசத்தையும், பெய்த மழையினால் பயனளிக்குமதான இந்நிலத்தையும் ரக்ஷரித்தருள்
பவனென்கை.
சுடராழி சங்கேந்தி=திருவாழி திருச்சங்குகள் பரமபதத்தில் ஆபரணமாய்க் காட்சி தரும்; இந்நிலத்தில் ஆயதமர்யிருந்து காரியஞ்செய்யும் என்ப.
English Translation
He is a radiant body of light; the Earth and sky are his. He bears the radiant conch and discus, and protects us all, pleasure, pain and the fourfold vices departing. When, O, when will I join his band of devotees!
