(3034)
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே.
பதவுரை
|
பொழில் ஏழும் உண்ட |
– |
(பிரளயத்தில்) ஏழுலகங்களையும் வயிற்றில் வைத்து நோக்கின |
|
எந்தாய் |
– |
எம்பெருமானே! |
|
எனது ஆவிஉள் கலந்த |
– |
என் ஆத்மாவுக்குள்ளே நீ ஒரு தன்மையாய்க் கலக்கப்பெற்ற |
|
பெரு நல் உதவி |
– |
நல்ல மஹோபகாரத்திற்கு |
|
கைம்மாறு |
– |
பிரதியுபகாரமாக |
|
எனது ஆவி |
– |
என் ஆத்மாவை |
|
தந்தொழிந்தேன் |
– |
உனக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன் |
|
இனி |
– |
இனிமேல் |
|
மீள்வது என்பது உண்டே |
– |
கொடுத்ததை மீட்டுப் பெற்றுக் கொள்வதென்பது உண்டோ? இல்லை; |
|
எனது ஆவியும் |
– |
எனது ஆத்மாவுக்கும் |
|
ஆவி |
– |
ஆத்மாவாயிருப்பவன் |
|
நீ |
– |
நீ (ஆதலால்) |
|
எனது ஆவி? யார் |
– |
என் ஆத்மா யார்? |
|
யான் ஆர் |
||
|
தந்த நீ |
– |
படைத்துக் கொடுத்த நீ தானே |
|
கொண்டாக்கினை |
– |
கவர்ந்து கொண்டவனானாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்தில் ஒருவர் ஒரு உபகாரஞ்செய்தால் உபகாரம்பெற்றவர் பிரதியுபகாரஞ் செய்வதென்று ஒரு முறைமையுண்டாதலால் அதன்படியே ஆழ்வாரும் எம்பெருமானுக்குக் கைம்மாறு செய்யக்கருதி ஆத்மஸமாப்பணமாகிற கைம்மாறு செய்ததாக முந்துறக்கூறி, உடனே ஆராய்ந்து பார்த்து, ஆத்மாவஸ்து நம்முடைய தாகிலன்றோ நாம் கொடுத்ததாக ஆகும் நாமும் நம்முடைமையுமெல்லாம் அவலுடைய சரக்காகவேயிருக்கும்போது நாம் கொடுத்ததாகக் கூறுவது பிசகு என்று அநுதபித்து ‘உன் வஸ்துவை நீயே கைப்பற்றிக்கொண்டாயத்தனையல்லது நான் ஸமாப்பித்ததாகச்சொல்லுவது உசிதமன்று’ என்று தலைக்கட்டுகிறார்.
இப்பாசுரத்தின் ஆறாயிரப்படி யருளிச்செயல் பரமபோக்கியம்; அது வருமாறு;-“இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியாலுள்ள நிரவதிகப்ரிதியாலே அறிவழிந்து ‘இவ்வாத்மா தம்முடையதன்று’ என்று நிரூபிக்கமாட்டாதாராய், அவன் தம்மோடு கலந்த இப்பெருநல்லுதவிக்குக் கைம்மாறாகத் தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளாவடிவமையாகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து தருகிற நான் ஆர்! தரப்புகுகிற இவ்வாத்மா ஆர்! பண்டேயுனக்கு
சேஷமாயிருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டருளினாயத் தனையிறேயென்கிறார்” என்பதாம்.
இந்த ஒரு பாசுரத்தின் கருத்தை ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் ‘வபுராதி‘ரி யோபி கோபி வா” (52) “மம நாத யதஸ்தி” (53) என்ற இரண்டு ச்லோகங்களினாலே அநுஸந்தித்தருளினார். முதலில் அஹம் அத்யைவ மயா ஸமாப்பீத; என்று ஆத்ம ஸமாப்பணம் பண்ணினதாக அருளிச் செய்தார். அதைத் தாமே மறுபடியும் ஆராய்ந்தார்; ‘ஐயோ! என்ன சொன்னோம் என்ன சொன்னோம்’ என்று நடுங்கி அதற்கு அநுதபிக்கின்றமைதோன்ற “மம நாத ! யதஸ்தி யோஸ்ம்யஹம் ஸகலம் தத்தி தவைவ மாதவ!. நியதஸ்வமிதி ப்ரபுத்ததீ; அதவா கிம் நு ஸமாப்பயாமிதே? என்று அடுத்தச்லோக மருளிச் செய்தார். “மயா அஹம் ஸமாப்பித; “ என்று சொன்னேனே; இப்படிச் சொல்வதற்கு எனக்கு என்ன அதிகாரமுள்ளது? நான் என்கிற ஒரு வஸ்துவும் என்னுடையது என்கிற ஒரு வஸ்துவும் ஸ்வதந்த்ரமாகவுண்டோ? “யானே நீ என்னுடைமையும் நீயே” என்றபடி எல்லாம் ஏற்கனவே உன்னுடையதாகவே யிருக்கும்போது, இந்த ஆத்மவஸ்து உனக்கு இல்லாதது போலவும் இப்போதுதான் புதிதாக என்னால் ஸமாப்பிக்கப்படுவதுபோலவும் பேசிவிட்டேனே பாவியேன்; ஸமாப்பிப்பதற்கு நானார்? ஸமாப்பிக்க என்னிடம் என்ன இருக்கிறது? அதிலும் உனக்கு ஸமாப்பிக்க என்ன இருக்கிறது? இவ்விஷயங்களை ஆராயாமலே அவிவேகியாய்ச் சொல்லிவிட்டேனே! என்று அநுதாபங்காட்டி அருளிச் செய்தார். அது ஆழ்வார் இங்குக் காட்டின வழியேயாம்.
பண்ணின ஆத்ம ஸமாப்பணத்தைப்பற்றி அநுதாபப்படுவதாகச் சொல்லலாமோ? அப்படியானால் அநுதாபயோக்யங்களான பாபங்களைப் போலே ஆத்மஸமாப்பணமும் ஒரு பாபந்தானேயாகும் அது செய்யக் கூடாதகாரியம் என்று ஏற்பட்டுவிடாதா? என்கிற கேள்வி பிறக்கும். இதற்குப் பூருவர்கள் அருளிச்செய்கிற ஸமாதானம் யாதெனில் ஆத்மஸமாபணம் பண்ணுகையும் பண்ணினதற்காகப் பிறகு அநுதாபங்காட்டுகையும் ஆக இரண்டும் இவ்விபூதியில் மாறிமாறி நடந்தே தீரும் என்கிறார்கள்.
“ஸம்ஸாரபீதியால் ஸமாப்பிக்கையும் ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநத்தால் அநுசயிக்கையுமிரண்டும் யாவந்மோக்ஷம் அநுவர்த்திக்கக்கடவது” என்பது பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸிக்தி.
English Translation
In exchange for your great favour of mingling with me, I have you my heart; now how can I every retrieve it? O Lord who swallowed the seven worlds! You are the soul in my heart. Who am I? What is mine? You gave and took what is yours.
