(3019)

(3019)

சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,

ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,

ஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,

சோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே.

 

பதவுரை

சோராத

ஒன்றுங்குறையாத

எப்பொருட்கும்

எல்லாப் பொருள்களுக்கும்

ஆதி ஆம்

காரண பூதனாகப்பெற்ற

சோதிக்கே

ஒளியுருவனான எம்பெருமானுக்கே

ஆராத காதல்

அடங்காத ஆசையையுடையரான

குருகூர்சடகோபன்

ஆழ்வார்

ஓர்ஆயிரம்

ஓராயிரமாக

சொன்ன அவற்றுள்

அருளிச்செய்த பாசுரங்களுக்குள்ளே

இவை பத்தும்

இ;ந்த பத்துப் பாசுரங்களையும்

சோரார்

மறவாதவர்கள்

வைகுந்தம்  –

பரமபதத்தை

திண்ணெனவே

திடமாகவே

விடார்

விடாமல் நித்யானுபவம் பண்ணப்பெறுவர்கள்

(கண்டீர்—–முன்னிலையசை.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் முடியப்புகுகிற தம்மை உய்வித்தற் பொருட்டு ஸேவை ஸாதித்தருளின எம்பெருமானைக் கண்டு தாம் உஜ்ஜீவித்து, தம்முடைய உஜ்ஜீவனத்தாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வம் ஒளி பெற்ற படியைக்கண்டு சாலவுமுவந்து அவனுடைய ஸர்வேச்வரத்தை நெஞ்சார அநுபவித்து, இப்படி ஸர்வேச்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள ஆசையாலே இத்திருவாய்மொழியை நியதமர்க அநுஸந்திக்குமவர்கள் ஒருநாளும் எம்பெருமானைப் பிரியார்கள்.

இது திண்ணம் என்று இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

“சோராத வெப்பொருட்கு மாதியாஞ்சோதிக்கே” என்றது எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ள படியைச் சொன்னதன்று;  இப்பதிகத்தை ஆழ்வார்அருளிச்செய்த பின்பு நேர்ந்த தன்மையைச் சொன்னபடி. நம்பிள்ளையீடு காண்மின்;— “இவ்வளவிலே வந்து இவரோடே கலந்து இவரை யுளராக்குகையாலே ஒன்றொழியாதபடி ஸகல பதார்த்தங்களும் ஈச்வரனுமாய் இவரோடே வந்து கலந்தத்தாலே உஜ்ஜ்வலனுமாயிருந்தான்;  இவர்க்கு வந்து முகங்காட்டுவதற்கு முன்பு ஸர்வேச்வரத்வமும் அழிந்ததுபோலே கிடந்தது; இவரொருத்தரையும் சோரக்கொடுக்கவே ஸர்வேச்வரத்வம் அழியுமிறே; இவாரிழவுதீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருட்கும் நிர்வாஹகனானான்.”

வெறுங்குருகூர்ச் சடகோபராயிருந்த ஆழ்வார்* ஆராத காதற்குருகூர்ச் சடகோபரானார் இத்திருவாய்மொழியிலென்க.  காதலையிட்டே நிரூபிக்கத்தகுந்தவரானார்.

 

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan with insatiable love addresses the great Lord, the radiant first-cause of all,  Those who master it will never depart from Vaikunta.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top