(3015)

(3015)

தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு

எம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,

வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,

மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே.

பதவுரை

கனம் இருளே

–

கனத்திருக்கின்ற இருளே !
எம்பெருமான்

–

எமக்கு ஸ்வாமியான
நாரணற்கு

–

நாராயணனுக்கு
மடம் நெஞ்சம் தோற்றோம்

–

விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை

–

எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி

அழுகின்ற எங்களை

நீ

–

நீ
நடுவே

–

நடுவில்நுழைத்து
வேற்றோர்வகையின்

–

பவைகர்கள் நலிகிற வகையைக் காட்டிலும்
கொடிது ஆய்

–

கொடுமையாகி
எனை ஊழி

–

காலமுள்ளவளவும்
மாற்றாண்மை

–

பகைவரது தன்மையை ஆளகையில்
நிற்றியோ

–

நிற்கிறாயோ?
வாழி

–

இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்று

பொடிந்து பேசுகின்றாள்.  முதற்பாட்டிற் சொன்ன நாரையென்ன, இரண்டாம் பாட்டிற் சொன்ன அன்றிற் பறவையென்ன, ஐந்தாம் பாட்டிற் சொன்ன கடலென்ன, நான்காம் பாட்டிற் சொன்ன வாடையென்ன, மூன்றாம் பாட்டிற் சொன்ன வானமென்ன, கீழ்ப்பாட்டிற் சொன்ன இளம்பிறைச் சந்திரனென்ன ஆகிய இவையெல்லாம் தம்மோடு துல்ய கயோகக்ஷேமங்களா யிருக்கின்றனவென்று கருதிய ஆழ்வார் அவற்றையெல்லாங் கூட்டிக்கொண்டு இங்ஙணம் சேதனப் பொருள்களோடு அசேதனப் பொருள்களோடு வாசியற நாங்களெல்லோரும் பகவத் விஷயத்திலீடுபட்டு நெஞ்சிழந்து எங்கள் ஆற்றாமையைச் சொல்லிக் கதறியழுதுகொண்டிருக்க, இருளே ! நீயும் எங்களைப்போலே (எங்கள் திரளிலே சேர்ந்து) கதறியழவேண்டியிருக்க. அது செய்யாதது மல்லாமல் பகைவரைக் காட்டிலுங் கொடிதாக நின்று எங்களை நீ ஹிம்ஸிக்கின்றாயே! இப்படியும் ஒரு கொடுமையுண்டோ? நீ இக்கொடுமை நீங்கி வாழ்க என்கிறாள்.

ஆக இங்ஙனே கூறப்பட்ட அர்த்தம் கீழ்ப்பாட்டுக்களோடும் மேற்பாட்டுக்களோடும் பொருந்தாமல் ஒரு சப்தஸ்வாரஸ்யத்தைப் பற்றியதாயிருக்கின்றது.  இது எம்பெருமானாருடைய நிர்வாஹமாகும்.  கீழ் மேற்பாட்டுக்களொடு பொருந்தவும் பொருள்கொள்ளலாம்-  இருளுக்கு மழுங்கியிருத்தல் ஸ்வபாவமாயிருக்கச்செய்தேயும் அது ஸ்வபாவமென்றிராமல் எம்பெருமானை பிரித்தாற்றாமையினாலே ஒளியும்  மழுங்கி வாய்திறந்து கதறவும் மாட்டாதே யிருக்கின்றதாகங்கொண்டு, ஏற்கனவே நோவுபட்டிருக்கிற வெங்களை உன்னுடைய துக்கத்தையுங் காட்டி இன்னமும் நோவுபடுத்துகிறாயே! சத்ருக்கள் நலியும் நலிவும் ஸூகமென்னும்படி கொடியையாய்க் கொண்டு எத்தனைகாலம் நலியக்கடவை! ஐயோ! உனக்குத் துயரம் நீங்குக என்கிறாள் என்னவுமாம்.Fresh casino sessions feel more rewarding when a platform combines an inviting lobby with enough variety to suit changing moods. Explore rocketplay casino registration for another take on online casino entertainment and a selection of gaming options worth browsing. Easy browsing and varied choices can keep both quick visits and longer gaming sessions enjoyable without making the experience feel complicated.

கனவிருளே என்றும், களையிருளே யென்றும் பாடபேதம், கன என்னும் வடசொல் விகாரம்.  கனை என்று வினைப்பகுதியுமாம்.

English Translation

O Engulfing darkness!  Having lost my frail heart to my Lord, I weep and lament my unbearable lot.  Alas, you are more cruel than my worst enemy; how long will you confront me? May you win!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top