(3016)
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.
பதவுரை
|
இருளின் |
– |
இருட்டினுடைய |
|
திணி |
– |
செறிந்த |
|
வண்ணம் |
– |
நிறத்தையுடைய |
|
மா |
– |
பெரிய |
|
நீர்சுழியே |
– |
நீருள்ள சுழியே! |
|
போய் |
– |
மிகவும் |
|
மருள் உற்று |
– |
மருட்சியடைந்து |
|
இரா பகல் |
– |
இரவும் பகலும் |
|
துஞ்சிலும் |
– |
முடிந்தாலும் |
|
நீ துஞ்சாய் |
– |
நீ ஓய்கின்றாயில்லை; |
|
ஆல் |
– |
ஆதலால் |
|
உருளும் சகடம் |
– |
உருளுகின்ற சகடத்தைத் திருவடிகளா லுதைத்தொழிந்த |
|
பெருமானார் |
||
|
எம்பெருமானுடைய |
||
|
அருளின் |
– |
க்ருபாகுணத்திலுண்டான |
|
பெரு நசையால் |
– |
பேராசையினால் |
|
ஆழாந்து |
– |
ஆழ்ந்து |
|
நொந்தாயே |
– |
நோவுபட்டாயோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்.
English Translation
O salty stream, flowing like molten darkness! Even if night and day find their ends, you do not rest. Are you too forlorn through the pain of separation? Did you seek the grace of the Lord who smote the cart?
