(3007)

(3007)

மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,

மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு,

மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,

மறப்பனோவினி யானென்மணியையே?

 

பதவுரை

மறப்பும் ஞானமும் ஒன்று : மறத்தலும் அறிதலுமாகிய ஒன்றையும்

நான் உணர்த்திலன்

நான் அறியேன்;

மறக்கும் என்று

(இப்படியிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து

செந்தாமரை கண்ணோடு

செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களோடு

மறப்பு அற

மறப்புக்கு அவகாசமில்லாதபடி

என் உள்ளே

எனது நெஞ்சினுள்ளே

மண்ணினான்  தன்னை

நிலைபெற்றிருந்தவனான

என் மணியை

எனது நீலரத்னமாகின எம் பெருமானை

இனி யான் மறப்பேனா

இனி நான் மறப்பேனோ? (ஒருநாளும் மறவேன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை மீட்டு அவனை மறந்திருத்தாலோவென்ன, தன்னை நான் மறவாமைக்காகத் தன்னுடைய அழகிய திருக்கண்களோடேகூட என்னுள்ளேபுகுந்து எனக்கு மிகவுமெளியனாய்க்கொண்டு ‘இனிப்பேரேன்’ என்றிருத்தருளினானாதலால் அவனை நான் மறக்கவிரகில்லையேயென்கிறார்.

மறப்பும் ஞானமும் நானொன்று உணர்த்திலன் = மறப்பென்றும் ஞானமென்றும் ஒன்றுமறிந்திலேன் நான். நான் ஒரு சேதநனாயிருந்து, நினைத்தது என் ஆதீனமாயிருந்தாலன்றோ மறப்பும் என்னதீனமாவது; அசித்கல்பனாயன்றோ நானிருந்தது. இப்படிப்பட்ட நான் நினைத்தேனாகவும் நினைவையும் தன் தலையிலே யேறிட்டு பிறந்தஞானத்திற்கு இடைவீடு வரவொண்ணாது’ என்று பார்த்து அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு தன்னைப்பற்றி யெனக்குவரும் மறுப்புப் போம்படி என்னுள்ளத்தினுள்ளே நித்யவாஸம் பண்ணுகிறவனை எங்ஙனே மறப்பேன்?

ஈற்றடிக்கு ஈடுகாண்மின்-; “பெருவிலையனானரத்னம் கைபுகுந்தால் அத்தை முடிந்து அநுபவியாதே

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top