(2961)

(2961)

கழிமின்தொண் டீர்கள் கழித்துத்

தொழுமீன் அவனைத் தொழுதால்

வழிநின்ற வல்வினை மாள்வித்து

அழிவின்றி யாக்கம் தருமே.

 

பதவுரை

தொண்டீர்கள்

தொண்டர்களே!

கழிமின்

விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்துவிடுங்கள்

கழித்து

அதனை கழித்துவிட்டு

அவனை

அப்பெருமானை

தொழுமின்

தொழுங்கள்;

தொழுதால்

தொழுதமாத்திரத்தினால் (அவன்)

வழி நின்றி

ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற

வல்வினை

வலிய பாவங்களை

மாள்வித்து

ஒழித்து

அழிவு இன்றி

சாச்வதமான

ஆக்கம்

முக்கியஸம்பத்தை

தரும்

தந்தருள்வன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராமபிரானுடைய வீரசரிதத்தை யநுஸந்தித்து இதர விஷயப் பற்றுகளைத் தவிரவே, அவன்றானே இடையூறுகளைப்போக்கி நித்ய கை’ஙங்கக்ரரியத்தைத் தந்தருள்வனென்கிறார். தொண்டீர்கள்! கழிமின் = தொண்டு பூண்டு அமுதமுண்ண விரும்பியிருப்பவர்களே! புறப்புண்டான பற்றுக்களில் நகையைத் தவிருங்கோள்; அங்ஙனம் தவிர்த்து அப்பெருமானத் தொழுங்கோள்; அங்ஙனம் தொழுதால் இவ்வாத்மாவோடே பொருந்திருக்கின்ற பிரபல கருமங்களை வாஸநையோடே போக்கி மீட்சியற்ற செல்வமாகிய மோக்ஷ புருஷார்த்தத்தை அவன்றானே கொடுத்தருளக் குறையில்லையென்றாராயிற்று. ஆக்கம்- ஸம்பத்து.

 

 

English Translation

Surrender, O Devotees, and worship him. The heavy karmas in your path standing as obstacles will vanish and abiding wealth will be yours.

(2961)

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top