(2908)
பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண்டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே.
பதவுரை
|
பரந்த |
– |
எங்கும் வியாபித்த |
|
தண் பரவையுள் |
– |
குளிர்ந்த கடலினுள் |
|
நீர் தொறும் |
– |
ஜலபரமாணுதோறும் |
|
பரந்த அண்டம் |
– |
விஸ்தாரமான இவ்வண்டத்திலிருக்குமா போலே |
|
இது என பரத்து உளன் |
– |
நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி) |
|
நிலம் |
– |
பூமியிலும் |
|
விசும்பு |
– |
மேலுலகங்களிலும் |
|
ஒழிவு அற |
– |
ஒன்றொழியாமே |
|
கரந்த சில் இடம் தொறும் |
– |
அதிஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும் |
|
இடம் |
– |
அவ்வவ்விடஙக்ளிலே |
|
திகழ் |
– |
விளங்காநின்ற |
|
பொருள் தொறும் |
– |
ஆத்மவஸ்துக்கள்தோறும் |
|
கரந்து |
– |
(வ்யாப்யவஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து |
|
எங்கும் பரந்து உளன் |
– |
எல்லாவிடங்களிலும் வியாபித்திராநின்றான் (யாவரெனில்;) |
|
இவை உண்ட கரன் |
– |
இவ்வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளேயடக்கி, தான் ஸ்திரமாயிருக்குமெம் பெருமான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப்பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிபகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார். கீழ் ஏழாம்பாட்டில் “சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றது முக்கியமாக நாராயண திருநாமத்தைத் திருவுள்ளம் பற்றியேயாமென்பது ஸம்பிரதாயம் சுருதியென்றால் வேதம்; மிகுசுருதி யென்றால் வேதாந்தமாகிய உபநிஷத்து சுடர் மிகு சுருதியென்றால் நாராயாணாநுவாகம். ஆகவே நாராயணாநுவாக ஸித்தனான எம்பெருமானுக்கே இப்பதிகத்தில் பரத்துவம் பேசப்பட்டதென்பது குறிக் கொள்ளத்தக்கது. ஸர்வவ்யாபகத்வமே நாராயண நாமத்தின் தேர்ந்த பொருளாதலால் அதனை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.
பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த்திவலைகள்தோறும் வியாபித்திரர் நின்றான் என்று முதலடியில் கூறினார். சாந்தோக்ய உபநிஷத்தில் சாண்டில்யவித்யையில் *ஏஷமஆத்மா அந்தர்ஹருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா: ஜ்யாயாநந்தரிக்ஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாநேப்யோ லேகேப்ய* என்று மிகப் பெரியதாக ஓதப்பட்டுள்ள பரம்பொருள் நீர்த்திவலையிலே வியாபியாநின்றால் அவகாசம் அற்பமாகி நெருக்குப்பட்டிருக்குமோவென்ன அப்படிப்பட்ட வருத்தமில்லையென்று ஸ்யாப்தியின் ஸௌகரியத்தை இரண்டாமடியாற் கூறுகின்றார் (ஓர் அண்டத்தை) ஸ்ருஷ்டித்து (அதிலே ஏகாசியை) வைத்தால் எப்படியிருக்குமோ அப்படி அஸங்கு சிதமாகவே வயாப்தியுள்ளதென்றவாறு.
இப்படி ஜலபரமாணுக்களிலே வியாபித்துவிடுமிவ்வளவோயோவென்ன; நில விசும்பொழிவற என்று பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே யென்கிறார். ஸகல பதார்ததங்களிலும் வியாப்தியுண்டென்று சொன்னபடி. அதனையே பின்னடிகளில் விவரிக்கின்றார். (கரந்தசிலிடந்தொறும் இத்யாதியால்.) இமையோடு இமைபொருந்தும் போதைக் காற்றிலே முடியும்படியான ஸூக்ஷ்மமான அல்ப சரீரங்கள்தோறும் அந்தந்த சரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய் கொண்டு விளங்காநின்ற ஆத்மாக்கள்தோறும், யார்க்கும் தெரியாதபடி வியாபித்திருக்கும்.
ஜீவாத்மாவானவன் சரீரத்திலே வியாபித்திருப்பது ஞானத்தினாலேயன்றி ஸ்வரூபத்தாலேயென்று; பரமாத்மா அங்ங்னன்றியே ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திராநின்றானென்க.
இப்படி சொல்லப்க்கூடுமோ? ஜீவஸ்வரூபமோ அணுவாக ஓதப்பட்டது; பரமாத்ம ஸவரூபமோ விபுவாக ஓதப்பட்டது. அஸவஸ்துவினுள்ளே விபுவான வஸ்து குறையற வியாபித்திருக்குமென்றால் இது எங்ஙனே ஸம்பாவிதம்? என், இவையுண்டகரனே என்பது இதற்கு ஸமாதானம் போலுள்ளது. “சிறுவடிவைக் கொண்டு பெரியவற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்தால் *தாழ்குழலார் வைத்த தயிருண்டபொன்வயிறு, இவ்வேழுலகமுண்டு மிடமுடைந்தால்* என்கிறபடியே பின்னையும் அவ்வயிறே இடமுடைத்தாம்படி யிருக்கவல்ல ஸர்வசக்தி சிறியவற்றிலே குறைவற இருக்கமாட்டானோ என்கிறார்” என்பது ஈடு.
கரன் = வடசொல்லிகாரம்; திடமாகவுள்ளவன் என்றபடி: திடமான பிரமாணமாகிய வேத வேதாந்தங்களில் ஸித்தன் என்றவாறு.
English Translation
He who swallowed all, reclines in the cool ocean, resides in every drop, the Universe itself, complete on Earth and in the sky, hidden everywhere, in every atom and cell continuously, forever.
