(2905)
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.
பதவுரை
|
திடம் |
– |
உறுதியான |
|
விசும்பு |
– |
ஆகாசமென்ன |
|
எரி |
– |
அக்நியென்ன |
|
வளி |
– |
வாயுவென்ன |
|
நீர் |
– |
ஜலமென்ன |
|
நிலம் |
– |
பூமியென்ன |
|
அவை அவை தொறும் |
– |
அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும் |
|
உடல் மிசை உயிர் என் |
– |
சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல |
|
கரந்து |
– |
மறைந்து |
|
எங்கும் பரந்து |
– |
உள்ளிலும் வெளியிலும் வியாபித்து |
|
இவைமிசை |
– |
ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு |
|
படர்பொருள் முழுவதும் ஆய் |
– |
படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி) |
|
சுடர்மிகு சுருதியுள் உளன் |
– |
தேசுபொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான் |
|
இவை உண்ட சுரன் |
– |
(ஸம்ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலேயாக்கிக் கொள்ளும் தேவனாவான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘கிழ்ப்பாசுரங்களில் எல்லாப் பொருள்கட்கும் எம்பெருமானே நியாமகன் என்று சொல்ல வேண்டியிருக்க அங்ஙனம் சொல்லாமல்’ எல்லாம் எம்பெருமானே’ என்று (ஸமாநாதிகரணமாகச்) சொல்லியிருப்பதால் அத்வைதாபிப்ராயம்போல் தோன்றக்கூடுமன்றோ? உண்மையில் அப்படியில்லை. ஸகல சேதநாசேதநங்களும் சரீரமாய் எம்பெருமான் ஸகலாந்தர்யாமித்வேத சரீரியாய் நிற்றலால் இப்படிப்பட்ட சரீர சரீரிபாவ ஸம்பந்தத்தைப் பற்றவே ஐக்கியம் சொல்லப்பட்டதென்று நிரூபிக்கிறது இப்பாசுரம். விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை இப்பாட்டு ஸாரமாக எடுத்துரைக்கின்றது என்றுணர்க.
திடவிசும்பு என்று தொடங்கி முழுவதுமாய் என்னுமளவும்- பஞ்சபூதமடியா கவுண்டாகின்ற ஸகல பதார்த்தங்களுக்கும் எம்பெருமானே உபாதாநகாரணம் என்று சொல்லுகிறது. ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஐந்து பூதங்களின் காரியப்பொருளாக விரிகின்ற தேவமநுஷ்யாதி ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கி என்றபடி முதலிலுள்ள திடம் என்னும் அடைமொழி ஆகாசமொன்றில் மாத்திரம் அந்வயிப்பதாகவுமாம்; மேலுள்ள நீலமீறான – பூதங்களிலும் அந்வயிப்பதாகவுமாம். காரியங்கள் அழிந்துபோனாலும் காரணங்களான பூதங்கள் சிறிது காலமளவும் அழியாதிருத்தல் பற்றித் திடமென்று பூதங்களை விசேஷிப்பதாகக் கொள்கை. இது ஆகாசத்திற்கு மாத்திரம் விசேடணமென்று கொள்ளில், ஆகாசமானது மற்றுள்ள பூதங்களுக்கு முன்னே யுண்டாகி அவை யழிந்தாலும் சிலநாள் நிலற்கக் கடவதாகையாலே திடமென்றதென்க. அன்றியும் லோகநாயகிகன் முதலான சிலர் ‘ஆகாசந்தவிர நான்கே பூதங்கள்’ என்று கொள்ளுகிறபடியால் அக்கொள்கையைக் கண்டித்து ஆகாசம் திடாகவுண்டென்று காட்டுகிறபடியுமாம்.
முழுவதுமாக்கி என்னாதே ஆய் உன்றது- *பஹுஸ்யாம் ப்ரஜாயேய* என்கிற உபநிஷத்தின் சாயையை அடியொற்றி யென்ப.
அவையவைதோறும் உடன்மிசை உயிரெனக்கரந்து எங்கும் பரந்துள்ள- உண்டான ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்குமெம்பெருமான் (உடன்மிசை உயிரென) நம்முடைய சரீரத்துக்கு ஆத்ம தாரகனாய் நியாயமகனாய் சேஷியாயிருப்பதுபோல அந்த சரீராத்மாக்களுக்கு எம்பெருமான்தான் தாரகனாய் நியாமகனாய் சேஷியாயிருக்குமென்றபடி. கரந்து என்றது ஒருவர்க்குத் தெரியாமல் என்றபடி எங்கும் பரந்து என்றது உள்ளும் புறமும் வியாபித்து என்றபடி.
ஆழ்வார் தாம் இப்படி நிஷ்கர்ஷித்து அருளிச்செய்கிற விஷயத்திற்கு மூலப்ரமானம் வேதமே யென்று காட்டுகிறார் உளன் சுடர் மிகு சுருதியுள் என்று.
இவையுண்ட சுரன்- கீழ்ப் பாசுரங்களில் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதிகள் எம்பெருமானுடைய அதீனமென்று சொல்லிற்று; ஸம்ஹாரமும் அவ்வெம்பெருமானுடைய செயலே யென்கிறது இதனால். பிரளயகாலத்திலே எம்பெருமான் ஸகலலோகங்களையும் தனது திருவற்றிலே வைத்தடக்கி ஆலந்தளிரிலே பள்ளி கொள்வதாக நூற்கொள்கை.
English Translation
The Lord of the Vedas who swallowed the Universe is manifest as Fire, Earth, Water, sky and Air. He is there in all the things made of these, hidden, like life in the body, everywhere.
