(2851)
கொழுந்துவிட் டோடிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்
தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னும், அருமுனிவர்
தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சுடர்மிக்
கெழுந்தது,அத்தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே.
பதவுரை
|
அருமுனிவர் தொழும் |
– |
அருமையான நிஷ்டையையுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும் |
|
தவத்தோன் |
– |
ப்ரபத்தியாகிற தபஸ்ஸையுடையவராயுமிருக்கிற |
|
எம் இராமாநுசன் |
– |
ஸ்வாமி எம்பெருமானாருடைய |
|
தொல் புகழ் |
– |
நித்யமான கல்யாண குணங்கள் |
|
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால் |
– |
மேன்மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ்கர்மத்தாலே |
|
நிரயத்து அழுந்தியிட்டேனை |
– |
ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக்கிடந்த என்னை |
|
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது |
– |
வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன: |
|
அத்தால் |
– |
அதைக்கண்டு |
|
இரு நிலம் |
– |
விசாலமான இப்பூமண்டலம் |
|
நல்ல அதிசயம் கண்டது |
– |
மிக்க ஆச்சரியங் கொண்டது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானாருடைய குணங்கள் மஹாபாபியான என்னை ஆட்படுத்திக் கொண்டவளவோடு த்ருப்திபெற்று விடமால் இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று இன்னமும் நாக்கு நீட்டிக்கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.
English Translation
I was caught in the evergrowing Ivy thicket of Sin, Ramanuja came and took mastery over me. But even after that, the sage worshipped by Yogis shone with the effulgence of lasting fame. This world has seen a miracle.
