(2847)
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்
உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே.
பதவுரை
|
மற்று ஒரு பேறு |
– |
ப்ரயோஜநாந்தரங்களை |
|
மதியாது |
– |
கணிசியாமல் |
|
அரங்கன் மலர் அடிக்கு |
– |
அழகிய மணவாளனாடைய திருவடித்தாமரைகளுக்கு |
|
ஆள் உற்றவரே |
– |
அடிமை பட்டவர்களையே |
|
தனக்கு உற்றவர் ஆ |
– |
தமக்கு ஆத்ம பந்துக்களாக |
|
கொள்ளும் |
– |
திருவுள்ளம்பற்றுகிற |
|
உத்தமனை |
– |
உத்தம புருஷராயும் |
|
நல் தவர் போற்றும் |
– |
ப்ரபந்நர்களாலே புகழப்பட்டவராயுமிருக்கிற |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
,நானிலத்தே பெற்றனன் |
– |
இந்தலோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப்பெற்றேன்; |
|
பெற்ற பின் |
– |
ஆச்ரயித்த பின்பு |
|
மற்று ஒரு பேதைமை அறியேன் |
– |
(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறியமாட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “இனி என் வாக்குரையாது, என்மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக்கூடும்? இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக்கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற, எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆகமாட்டேனென்கிறார்.
நல்தவர் போற்றும் = ப்ரபத்தியாகிற நல்ல தபஸ்ஸைக் கைப்பற்றினவாகளாலே போற்றப் படுவர்.
English Translation
Conceding to nothing else, our perfect Ramanuja, king of ascetics, considered only the devotees of Lord Ranganatha’s lotus feet as his dear ones. Having received the good fortune of his grace, my heart does not long for anything else.
