(2844)
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகைவள்ளல்
வாட்டமிலாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வுகண்டே.
பதவுரை
|
மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் |
– |
இப்பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தையுடையரான எம்பெருமானாருடைய |
|
இயல்வு |
– |
ஸ்வபாவத்தை |
|
கண்டு |
– |
பார்த்து, |
|
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன |
– |
(துஷ்டயுகதிகளாவே) நிலை நிறுத்தப்பட்டிருந்த கூஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன; |
|
நாரணனை காட்டிய |
– |
ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்க |
|
வேதம் |
– |
வேதங்களானவை |
|
களிப்பு உற்றது |
– |
(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன; |
|
தென் குருகை வள்ளல் |
– |
அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த) |
|
வாட்டம் இலா |
– |
ஒரு குறையுமற்ற |
|
வண் தமிழ் மறை |
– |
சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி |
|
வாழ்ந்தது |
– |
வாழ்வு பெற்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்யமிருகங்கள் நசித்தொழியும்; அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி செய்யவேண்டா அதுபோல, இவ்வுலகில் கிளர்ந்துகிடந்த பாஷஹ்யகுத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார் ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ளவில்லை; அவை மாளவே ஸ்ரீ மந்நாராயணபரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச்செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.
English Translation
On seeing the essence of goodness in Ramanuja’s philosophy, all the lowly heretic thoughts withered. The Vedic truth of Narayana rejoiced. The peerless fragrant Tamil Vedas of Southern Kurugur Saint gained a new life.
