(2841)

(2841)

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்

முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமா னுசனென் னை ஆளவந்திப்

படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.

 

பதவுரை

அன்று

–

முற்காலத்தில்

அடியை தொடர்ந்து

–

திருவடிகளை அவலம்பித்து

எழும்

–

செருக்கிக்கிளர்ந்த

ஐவீர்கட்கு ஆய்

–

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷபாதம் பூண்டு)

பாரதப் போர்

–

பாரதயுத்தத்திலே

முடிய

–

(துரியோதநாதிகள்) மாளும்படியாக

பரி நெடு தேர்

–

குதிரை பூண்ட பெரிய தேரை

விடும்

–

நடத்தின

கோனை

–

ஸர்வேச்வரனை

முழுது உணர்ந்த

–

(ஸ்வரூப ஸவபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத்தெரிந்து கொண்ட

அடியர்க்கு

–

பாகவதர்களுக்கு

அமுதம்

–

பரமபோக்யமான

இப்படியில்

–

இப்பூமண்டலத்தில்

வந்து பிறந்தது என்னை ஆள

–

வந்து அவதரித்தது  (எதற்காகவெனில்) அடியேனை ஆட்கொள்ளுகைக்காகவேயாம்;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

 

English Translation

Then in the yore the lord drove the steed-driven chariot for the five devoted Pandavas in the Bharata war. Now he has taken birth again as Ramanuja, the sweet ambrosia of devotees, for my upliftment alone, I can see no other reason.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top