(2825)

(2825)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்

புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்

மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்

அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?

 

பதவுரை

ஒரு தெய்வம்

–

வேறொரு தெய்வத்தை

நயவேன்

–

விரும்பமாட்டேன்

நால்நிலத்தே

–

இவ்வுலகில்

சில மானிடத்தை

–

சில நீகமனிதர்களைக் குறித்து

புயலே என

–

‘மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி

கவி போற்றி செய்யேன்

–

கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்யமாட்டேன்;

பொன் அரஙகம் என்னில்

–

‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே

மயல் பெருகும்

–

அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற

இராமாநுசன்

–

எம்பெருமானாருடைய

மன்னா மா தாள மலர்

–

பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை

அயரேன்

–

மறக்கமாட்டேன்;

(ஆனபின்பு)

அயரேன்

–

கொடிய பாவங்கள்

என்னை

–

என்னை

இன்று

–

இன்று முதலாக

எவ்வாறு அடர்ப்பது

–

எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?

 

English Translation

I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, “O Cloud!” But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top