(2801)

(2801)

சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமி ழாலளித்த

பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்

தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்

காரிய வண்மை, என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

 

பதவுரை

சீரிய நால்மறை செம் பொருள்

சிறந்த நால் வேதங்களிலுள்ள செவ்வியபொருள்களை

செம் தமிழால்

அழகிய தமிழ்ப்பாசுரங்களினால்

அளித்த

அருளிச்செய்தவரும்

சரண் ஆம் பதுமம் தார் இயல்சென்னி

திருவடிகளாகிற தாமரைப்பூவாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியையுடையரான

இராமாநுசன் தன்னை

எம்பெருமானாரை

சார்ந்தவர் தம்

ஆச்ரயமாகப் பற்றினவர்களுடைய

பார் இயலும் புகழ்

பூமியெங்கும் பொருந்தின புகழையுடையவருமான

பாண் பெருமாள்

திருப்பாணுழ்வாருடைய

காரியம் வண்மை

அநுஷ்டாநவைலக்ஷண்யமானது

இக்கடல் இடத்து

கடல்சூழ்ந்த இப்பூமியில்

என்னால் சொல்லஒணுது

(இப்படிப்பட்ட வைபவ முடையதென்று) என்னால் சொல்லித் தலைக் கட்ட முடியாதது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானாடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளை யெல்லாம் விசதமாகப் பேசுகையாலே சிறந்தவையான நால்வேதங்களில் பொதிந்து கிடக்கும் நற்பொருள்களை “அமலனாதி பிரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தில் சுருக்கி அருளிச் செய்தவராய் நாடெங்கும் பரவின புகழையுடையரான திருப்பாணுழ்வாருடைய சரணுரவிந்தங்களாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவரான எம்பெருமானாரை அடிபணிந்தவருடைய ஆசாரவைலக்ஷ்ண்யமானது என் வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி மிகவும் சிறந்தது என்றாராயிற்று.

 

English Translation

Tiruppanalvar rendered the essence of the Vedas in Sweet Tamil songs. Ramanuja always wore the Alvar’s feet-lotus as a garland on himself.  Those who take refuge in Ramanuja display such excellence as I cannot describe in this wide world.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top