(2796)

(2796)

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்

மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்

முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.

 

பதவுரை

ஈன் கவிகள்

விலக்ஷணரான கவிகள்

அன் பால்

ப்ரீதியினாலே

இயலும் பொருளும்

சப்தமும் அர்த்தமும்

இசைய

நன்கு பொருள் தும்படியாக

தொடுத்து

கவனம் பண்ணி பாடல்களிலே

பக்தி இல்லாத

பக்தியற்றதான

என் பாவி நெஞ்சால்

என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே

அவன் தன்

அவ்வெம்பெருமானாருடைய

மயல்

வ்யாமோஹம்தலையெடுத்து

வாழ்த்தும் இராமானாசனை பயிலும்

துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற

பெரு கீர்த்தி

அளவற்றகீர்த்திகளை

மொழிந்திட

பேசுவதாக

மதி இன்மையால் முயல்கின்றன

புத்தியில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “பக்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோவென்று பார்த்தார், ‘அந்தோ! நாமோ அவ்வெம்பெரு மானாரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத்தாமே வெறுத்துக் கொள்ளுகிறார் இதில் – இன்கவி பாடும் பரமகவிகளான சில மஹான்கள் சொல்லின்பமும் பொருளின்பமும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினாலே வ்யாமோஹித்து இராமாநுசனை வாழ்த்தா நிற்பர்கள்; அன்னவர்களுடைய பக்திபரீவாஹ ரூபமான கவிகளில் ஆதரமற்ற எனதுபாவி நெஞ்சால் அவ்விராமாநுசனுடைய பெருப்பெருத்த புகழ்களை யெல்லாம் பேசுவதாக நான்முயல்கின்றேனே! இஃது என்ன புத்திகெட்ட தன்மை! என்று வெறுத்துக்கொள்ளுகிறார்.

 

English Translation

Sweet poets with love in their hearts lose themselves praising Raamanjua, blending proper words and meaning, Alas! endowed with a devotion sinful heart, I too am trying to speak of his glory,-it is sheer madness!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top