(2792)

(2792)

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்

கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்

விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்

உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.

 

பதவுரை

கள் ஆர் மொழில் தென் அரங்கன்

தேன் நிறைந்த சோலைகளையடைய தென் திருவரங்கத்திலே பள்ளிகொள்ளும் பெருமானுடைய

கமலம் பாதங்கள்

தாமரை போன்ற திருவடிகளை

நெஞ்சில் கொள்ளா

தமதுநெஞ்சிலே வையாத

மனிசரை நீங்கி

மனிதர்களை விட்டொழித்து,

குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்

திருமங்கைமன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியையுடையரான

இராமாநுசன்

எம்பெருமானாருடைய

மிக்க சீலம் அல்லால்

சிறந்த சீலகுணத்தைத் தவிர

ஒன்று

வேறொன்றையும்

என் நெஞ்சு உள்ளாது

எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது;

(இவ்வாறாக)

எனக்கு உற்ற பேர்இயல்வு

எனக்குஸித்தித்ததொரு சிறந்தஸ்வபாவத்திற்கு

ஒன்று அறியேன்

ஒருகாரணத்தையும் அறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித்தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளோடு உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியாநின்றது; இப்படிப்பட்டதொரு பெருந்தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக  க்ருபாகடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.

 

English Translation

I cannot understand this good fortune. My heart does not think of anything other than the extreme benevolence of Ramanuja.  He gave up the company of men who do not contemplate the lotus feet of the nectar-groves-surrounded-Arangam lord, and only sought the feet of the kuraiyalur king. Tirumangai Alvar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top