(2661)
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
பதவுரை
|
இரைக்கும் கடல் |
– |
கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே |
|
கிடந்த |
– |
பள்ளிக்கொண்டிரா நின்ற |
|
எந்தாய் |
– |
ஸ்வாமீ! |
|
உரைக்கில் |
– |
ஆராய்ந்து சொல்லில், |
|
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே |
– |
(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ? |
|
எனது உயிர்க்கு |
– |
என் ஆத்மாவுக்கு |
|
ஓர் சொல் |
– |
‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே |
|
நன்றி ஆகும் துணை |
– |
உதவிசெய்யும் துணையும் |
|
உரைப்பு எல்லாம் |
– |
மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும் |
|
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் |
– |
உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயேகாண்” என்கிறார்.
“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது “உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.
ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை. ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே – அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.
English Translation
O Lord reclining in the roaring ocean! Come to think, who are my friends? Who are my relatives? I have none to call save you. Every good world I utter in your praise is my soul’s companion.
