(2661)

(2661)

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,

இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,

நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்

சொல்நன்றி யாகும் துணை.

 

பதவுரை

இரைக்கும் கடல்

–

கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே

கிடந்த

–

பள்ளிக்கொண்டிரா நின்ற

எந்தாய்

–

ஸ்வாமீ!

உரைக்கில்

–

ஆராய்ந்து சொல்லில்,

ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே

–

(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?

எனது உயிர்க்கு

–

என் ஆத்மாவுக்கு

ஓர் சொல்

–

‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே

நன்றி ஆகும் துணை

–

உதவிசெய்யும் துணையும்

உரைப்பு எல்லாம்

–

மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்

நின் அன்றி மற்று இலேன் கண்டாய்

–

உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயேகாண்” என்கிறார்.

“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது “உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை. ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே – அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

 

English Translation

O Lord reclining in the roaring ocean!  Come to think, who are my friends? Who are my relatives? I have none to call save you. Every good world I utter in your praise is my soul’s companion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top