(2583)

(2583)

ஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க மணைநீ ராட்டி,படைத்திடந் துண்டுமிழ்ந்

தளந்து,தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி

தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,

கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி

தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.

 

பதவுரை

உலகு

லோகங்களை

படைத்து

ஸ்ருஷ்டித்தும்

இடந்து

ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்

உண்டு

(மற்றொருகால் பிரளயம் வந்தபோது) வயிற்றிலே வைத்து நோக்கியும்

உமிழ்ந்து

பிறகு வெளிப்படுத்தியும்

அளந்து

(பின்னுமொருகால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக்கொண்டும்

புடை

ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்

தான் அறி

தான் தோன்றித்தனமாக அறிந்து கொள்ளக்கூடியவும்

கல

வலகைப்பட்டு மிருக்கிற

தெய்வம்

தேவதைகளை

பேணுதல்

ஆராதிப்பது

தனாது

தன்னுடைய

புல்

அறிவாண்மை

நீசபுத்தியை

பொருந்த காட்டி

விளங்கக் காட்டிக்கொண்டு

ஈன்றோள் இருக்க மணை நீராட்டி

பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,

கொல்வன முதலா

ஆடு பலிகொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான

அல்லன முயலும்

தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற

தேர்ந்து

இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்

அளிக்கும்

(முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற

முதல் பெரு கடவுள் நிற்ப

ஸர்வகாரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)

இனைய செய்கை

இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன

அளி

(அந்த க்ஷுத்ரதெய்வங்களின்) ப்ரஸாதமோ

இன்பு துன்பு

ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)

தொல்

அநாதியாய்

மா

மஹத்தாய்

மாயம்

ஆச்சரியமான

பிறவியுள்

ஸம்ஸாரத்தில் நின்றும்

நீங்கா

ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே

பல் மா மாயத்து

பலவகைப்பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே

நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு

இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “முடிதோளாயிரந்தழைத்த நெடியோய்க்கல்லது மடியதோவுலகே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த ஆழ்வார் தம்முடைய கொள்கைப்படியே உலகமனைத்தும் எம்பெருமானை வணங்கி வழிபட்டு உஜ்ஜீவிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தார். க்ஷுத்ரபலன்களை விரும்பி க்ஷுத்ரதேவதைகளை ஆராதிக்கின்ற க்ஷுத்ர ஜனங்களே மிகுதியாகக் காணப்பட்டன. பரிதாபம் பொறுக்கமாட்டாமல் ஐயோ! ஐயோ! இப்படியும் உலகம் பாழாய்ப்போவதே! என்று வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொள்ளுகிறார் – ஓ ஓ என்று கதறுகிறார். இப்படி இவர் ஓ ஓ என்று கதறுகிற கதறல் எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர்தாம் கீழ்ப்பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவு தூரம் கேட்குமென்னில், இவர்தாம் கீழ்ப்பாட்டில் பேசின மேலுலகளந்த திருவடி எவ்வளவுதூரம் சென்றதோ, அவ்வளவிலும் மேலாகவே சென்று ஒலிக்குமென்று கொள்ளீர்.

இவ்வுலகின் ஸ்வபாவத்தை நாம் என்ன சொல்லுவோம்! இவ்வுலகம் செய்கிற காரியம் என்னவென்றால், நன்றிகெட்ட காரியஞ்செய்யாநின்றது. பிள்ளையைப் பெறுவதற்கு முன்பு பலவகைக் கஷ்டங்கள் பட்டும் பெற்றபின்பும் குறையற ஸம்ரக்ஷிப்பதற்காக எத்தனையோ வருத்தங்கள் கஷ்டங்கள் பட்டும் நன்மையே செய்து போருகிற மாதாவுக்குப் பலவகை உபசாரங்கள் செய்யவேண்டியது ப்ராப்தமாயிருக்க, அவளைத் திரஸ்கரித்துவிட்டு உபயோகமற்றவொரு மணைக்கட்டையை ஆதரித்து அதற்குக் கொண்டாட்டங்கள் செய்வரைப்போலே இவ்வுலகத்தவர்கள், பலவகை உபகாரங்களும் செய்து போருகிற எம்பெருமானை அநாதரித்துவிட்டு ஒரு நன்றியும் செய்யமாட்டாத அசேதநப்ராயங்களான புதுத்தெய்வங்களைக் கொண்டாடுகின்றார்களே! இது விவேகமிருந்து செய்கிற காரியமோ? அறிவு உள்ளவர்கள் இப்படியுஞ் செய்வார்களோ? எம்பெருமான் இவ்வுலகுக்குச் செய்த உபகாரங்களை இன்று நான் புதிதாகச் சொல்லவேண்டுமோ?  இறகு ஒடிந்த பக்ஷிகளைப்போலே கூட்டினதும், ஹிரண்களை யிழந்துகிடந்த இவ்வாத்துமாக்களைக் கரணகளே பரங்களோடே கூட்டினதும், ஹிரண்யாக்ஷன் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோன இந்நிலவுலகத்தை மஹர வாரஹமாகி மீட்டுக் கொணர்ந்ததும், இவ்வுலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் நசித்துப்போக நேர்ந்தகாலத்துத் திருவயிற்றிலே வைத்து ஸம்ரக்ஷித்தும், பிரளயங்கழிந்தவாறே பழையபடி வெளியிட்டதும், மாவலியிடத்து நீரேற்றுப் பெற்றுத் தாளின்கீழ் ஆட்படுத்திக்கொண்டதும் முதலான உபகாரங்கள் சொல்லிமுடியுமோ? இப்படிப்பட்ட உபகரங்கள் இன்னும் எத்தனையோ செய்வதாகத் திருவுள்ளம்பற்றி யிருப்பவனன்றோ திருமால். அவனைத்தவிர வேறொரு முழுமுதற்கடவுள் இவ்வுலகுக்கு உண்டோ? நன்றியறிவுள்ளவர்கள் அப்பெருமாலுக்கன்றோ பணிவிடைகள் செய்ய ப்ராப்தம், அவனுக்குச் செய்யாத்தோடு ஒரு நன்றியுஞ் செய்யமாட்டாத தேவதாந்தரங்களுக்குப் போய்ப் பணிவிடை செய்கிற இவ்வுலகின் அவிவேகத்தை என்ன சொல்லுவோம்? அந்த தேவதாந்தரங்கக்கு இவர்கள் செய்கிற ஆராதனம் என்ன வென்றால் ஆட்டைவெட்டிப் பலியிடுவதும் கோழியைக்கொண்டு நைவேத்யஞ் செய்வதும் இவைபோல்வன ஜவஹிம்ஸைச் செயல்களேயாகும். இதற்குப்பலனாக அந்த தேவதைகள் கொடுப்பது என்னவென்றால், இந்த ஸம்ஸாரத்திலேயே தரைப்பட்டு அழுந்தி உழல்வதற்கு உறுப்பான ஆபாஸ ஸுகங்களேயாம். உண்மையில் இவை ஸுகங்களல்ல; துக்கங்களேயாம். இப்படிப்பட்ட துக்கங்களைப்பெற விரும்பி இவ்வுலகம் ப்ராப்த தேவதையைவிட்டு தேவதாந்தர பஜநம் பண்ணித்திரிகின்றதே! அநியாமாய் அநர்த்தப்பட்டுப் போகின்றதே! இதனில் மிக்க பரிதாபமுண்டோ! என்றாராயிற்று.

ஈன்றோளிருக்க மணைநீராட்டி பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம், தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்டான், போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வங் கொண்டாடுந் தொண்டீர் பெற்றதாயிருக்க மணையடியொற்றியதே. மணை நீராட்டி – மணை என்றது அசேதநவஸ்துக்களை யெல்லாம் சொன்னபடி. நீராட்டி என்றது உபசாரங்கள் பலவற்றையுஞ் சொன்னபடி. ‘மணைநீராட்டுமா போலே‘ என்று சொல்லவேண்டுமிடத்து (அவாய் நிலையாக) உவமையை உள்ளடக்கி மணைநீராட்டி என்றே சொன்னதன் கருத்துயாதெனில், தேவதாந்தர பஜநம் பண்ணுவதோடு மணை நீராட்டுவதோடுஒரு வாசியில்லை, இதுதான் அது, அதுதான் இது என்று இரண்டுக்கு முள்ள அபேதத்தைக் காட்டினபடியாம்.

மாதர்கள் ப்ரஸவித்தவுடனே பெற்ற அத்தாயையும் பிறந்த சிசுவையும் ஸ்நாநஞ்செய்வித்தல் மலைகாட்டு வழக்கமாக வெகு முற்காலத்தில் இருந்ததாம். ப்ரஸவித்தவுடனே காயை நீராட்டுவது பலவகைக் கஷ்டங்களுக்குக் காரணமாவதால் அத்தாய்க்குப்பதிலாக ஒரு மணைக்கட்டையை ஸ்நானஞ்செய்விப்பது இடைக்காலத்து வழக்கமாக இன்றைக்கும் நடந்து வருகின்றதாம். அதனைத் திருவுள்ளம்பற்றி இங்கு ஆழ்வார் இப்படி அருளிச்செய்தார் என்று சிலர் சொல்லுவர்.

புடைப்பலதானறி தெய்வம்பேணுதல் – புடை என்றது எதோவொரு பக்கம் என்றபடி, வேதத்தில் ஏதோ ஒரு மூலையில் சிவன் என்றும் ருத்ரன் என்றும் ஹிரண்யகர்ப்பன் என்றும் சில பதங்கள் கிடந்தால் அவற்றின் பிரகரணத்தையும் பொருளையும் தெரிந்துகொள்ளாது அந்த தேவதைக்குப் பரத்துவஞ் சொல்லியிருப்பதாகக் கொள்வார்களே சிலர் அதைச் சொல்லுகிறது. ஆனதுபற்றியே தானறிதெய்வம் என்றுஞ் சொல்லப்பட்டது. புதரகாமவம் என்றபடி அவரவர்கள் பற்றும் தெய்வங்கள் பலபலவாயிருப்பது பற்றிப் பலதெய்வம் பேணுதல் என்றார்.

தனது என்பது ‘தனது‘ என்று நீட்டல் விகாரம் பெற்றுக்கிடக்கிறது. ‘புல்லறிவாளன்‘ என்று விவேகமற்றவனைச் சொல்லுகிறது புல்லறிவாண்மையாவது அவிவெகம் கொல்வன முதலா அல்லன – இவ்வாழ்வார் தாமே திருவாய்மொழியில் “தீர்ப்பாரையாமினி“ என்ற திருவாய்மொழியில் “நீர் எதுவானுஞ் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியுந் தூ வேல்மின்“ என்றும், “நீர்கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் ளனிழைத்தென்பயன்“ என்றும், “அணங்குக் கருமருந்தென்றங்கோர் ஆடுங் கள்ளும்பராய்“ என்றும், “ஏதம்பறைந்து அல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய் கீதமுழவிட்டு நீரணங்காடுதல் கீழ்மையே“ என்றும் அருளிச்செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தகும்.

இன்புதுன்புஅளி – அளிப்பது அளி, அதாவது கொடுக்கும் வஸ்து, தேவதாந்தரங்கள் தரும்பொருள் யாதெனில், இன்பு துன்பு – இன்பாவது ஸுகம், துன்பாவது துக்கம், ஸுகமென்று பரமிக்கக்கூடிய துக்கமென்றவாறு ஸம்ஸாரத்தில் கிடைக்கும் ஸுகங்களெல்லாம் இப்படிப்பட்டவையேயாம். பிள்ளை பெறுவது செல்வம் பெறுவது என்னுமிவை மேலெழப்பர்க்கையில் ஸுகமாகத் தோன்றி, வரவரத் துன்பமாகவே முடிகின்றமையைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

தேவதாந்தர பஜனம் பண்ணுவது நித்ய ஸம்ஸாரியா யொழிவதற்கு க்ருஷிபண்ணுவதேயன்றி வேறில்லை யென்பதைக் கூறி முடிக்கிறார் தென்மாமாயப் பிறவியுள்நீங்காப் பன்மாமாய்த் தழுந்துமா நளிர்ந்தே என்று.

 

English Translation

Alas, alas, the ways of the world!  Leaving out the mother cow they bathe the newborn calfi Leaving aside the First-cause Lord who made, lifted, swallowed, remade, and measured the Universe, thus protecting it at all times, they pick-up some unknown wayside godling for worship, and only display their small minds and big egos, ending in cruelty and wicked acts that give sweet pain, driving the trembling nervous soul further into depths of Karmic hell!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top