(2554)

(2554)

திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட

செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை

வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா

நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே.

பதவுரை

திங்கள்

பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை

அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப

(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட

சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய செங்கோள்மையையுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்

செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி

அடைந்து
நின்று

(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு

வருந்துகிற
புல்மாலை

சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை

தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம்செய்த

கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்

நமது வோதி தேவனான தலைவனது
துழாய்

திருத்துழாயை
துணை ஆ

தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்ககளை மாமை கொள்வான்

நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது

எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாலைப்பொழுதுக்கு ஆற்றாத நாயகி இரங்கி யுரைக்கும் பாசுரம் இது. கீழ் “பால்வாய்ப் பிறைப்பிள்ளை” என்ற முப்பத்தைந்தாம் பாட்டின் முன்னடிகளை இப்பாட்டின் முன்னடிகட்கு ஸ்மரிப்பது. இதில் மாலைப்பொழுதை ஒரு மகளாகவும், ஸூர்யனை அவளது கணவனாகவும், சந்திரனை அவர்களது பிள்ளையாகவும் ஸுர்யனது சிவந்த கிரணங்களை அவனது செங்கோலாகவும், அந்த ஸூர்யன் அஸ்தமிப்பதை அக்கணவன் இறந்து போவதாகவும், அவன் அஸ்தமிக்கின்ற திக்கினிடத்தை அவனிறந் விழுந்தொழிந்த போர்க்கலமாகவும், ஸூர்யாஸ்தமாக காலத்து மேற்குத் திக்கில் அவன் கிரணஸம்பந்தத்தால் தோன்றுகிற செவ்வானத்தை அவன் போரில் பட்டு இறக்கும்போது அவனது ரத்தம் தெரித்த இடமாகவும் உருவகப்படுத்தியவாறு. கணவனைப் பிரிந்த இவளுக்கு, கண்ணிற்காணும் பொருளெல்லாம் கணவனை யிழந்ததாகத் தோன்றுதலால் இக்கற்பனை கூறினானென்க. இப்படி கண்டாரிரங்கத்தக்க நிலைமையை யடைந்த மாலைப்பொழுது, ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத்துழாயைத் துணையாகக்கொண்டு நாயகியை வருத்துதலை, தனது மக்கள் தனிமைப்படத்தன் கணவனையிழந்து வருந்திய தடாகை அகஸ்திய சாபத்தை உதியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல்போலக் கொள்க.

‘புலம்ப’ என்பதற்கு-தனிப்பட்ட என்றும், வாட என்றும், அழ என்றும், உரையிடலாம். புலம்புதலென்பதும தனித்தலென்னும் பொருளதாதலை ‘புலம்பே தனிமை’ (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உயிர்ச்சொல்லியல்-33.) என்பதனால் அறிக. மாலைப்பொழுதிற் காணப்படும் பிறையின் பிரகாசக் குறையை வாடுதலாகவும், அக்காலத்தில் பறவைகள் மிகுதியாக ஒலித்தலையாவது கடலொலியையாவது அழுகைக் குரலாகவும் கருதுக. இலங்கை வேங்களஞ்செய்த = எல்கையிலள்ள ராக்ஷஸர்களை வேரறும்படி போர் செய்தழித்த என்றபடி. ‘வெங்களஞ்செய்தல்- ச்மசாநமாக்குதல்’ என்றுமுரைப்பர். ‘ஒரு பிராட்டியைப் பிரிந்திருக்கமாட்டாமல் தாம் பெரு முயற்சி செய்து கடல்கடந்த கொடும் பகை யொழித்துக் கூடியருளியவர், இப்பொழுது எம்மை இங்ஙனம் உபேக்ஷப்பதே!’ என்ற இறக்கந்தோன்ற தென்பாலிலங்கை வெங்கனஞ் செய்த நம் விண்ணோர் பிரானார்’ என்றது. தேவர்களுக்குக் கொடுமை தீர்த்தவர் எமக்குக் கொடுமை நீர்த்திலரே என்று குறிப்பிட வேண்டி, ‘விண்ணோர்பிரானார்’ என்றது.

துழாய் துணையா = மாலைப் பொழுதுக்குத் திருத்துழாய் துணையானதாகச் சொல்ல தன் கருத்து, திருத்துழாய் நமக்குக் கிடையாததாய்க் கொண்டு நம்மை எப்படி வருத்துகின்றதோ அப்படியே இந்த மாலைப்பொழுது வந்து வருத்துகின்றது என்பதாம். நங்களை- நங்களது உருபுமயக்கம்.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிப்பதற்கு உரிய காலம் ஸமீபித்து அவனது போக்யதையை நினைப்பூட்டித் தம்மை வருந்தும் விதத்தை ஆழ்வார் அருளிச் செய்தலாம். (திங்களம்பிள்ளை + எள்குபுன்மாலை) தமக்கு உண்டான ஜ்ஞாநப்ரகாசம் துயரமடையும்படி செவ்விதான மஹா விவேகமுங் குலைந்து பக்தியே விஞ்சி ஆற்றாமை விளைக்கிற கொடிய இக்காலமானது (தென்பால் + துழாய் து¬ணா) துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சீலரான எம்பெருமானது யோக்யதையை நினைப்பூட்டிக்கொண்டு. (நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே) எமது ஸ்வரூபத்தை மாற்றும்படி வருத்துகிறது என்கை.

English Translation

The twilight wife bemoans the death of her husband the noble king sun in the bloody-red battlefied of the West, while the child Moon wails without consolation.  The Lord who devastated the Southern Lanka city, Rama, the Lord of celestials, comes to destroy our well being with his Tulasi-garland ally, alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top