(2528)
மலைகொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள் ளாதுகடல் பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள் வானொத் தழைக்கின்றதே!
பதவுரை
| கடல் |
– |
கடலானது |
| மலை |
– |
மந்தரபர்வதத்தை |
| மத்து ஆ கொண்டு |
– |
மத்தாகக்கொண்டு |
| அரவால் |
– |
வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால் |
| சுழற்றிய |
– |
(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த |
| மாயம் |
– |
அற்புதசக்தி வாய்ந்த |
| பிரான் |
– |
எம்பெருமான் |
| அலைகண்டு |
– |
(தன்னை) அலைத்து |
| கொண்ட |
– |
(தன்னிடத்தினின்று) எடுத்துக்கொண்ட |
| அமுதம் |
– |
அமிர்தத்தை |
| கொள்ளாது |
– |
(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல், |
| வேரி துழாய் துணை ஆ |
– |
பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு |
| துலைகொண்டு |
– |
ஒத்து எதிர்வந்து |
| தாயம் கிளர்ந்து |
– |
பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து |
| பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து |
– |
நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று) விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது. |
| அழைக்கின்றது, |
– |
(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கடலோசைக்கு ஆற்றாத நாயகி இரங்கியுரைத்த பாசுரம் இது. பிரிந்தார்க்குக் கடலோசையானது மிகவும் காமோத் தீபகமாயிருக்கும். அக்கடலோசையால் தன் உடம்பு இளைக்கையில் கைவளைகள் கழன்று விழுவதைக்கண்ட பராங்குச நாயகி ‘பரிபூர்ண சக்தி வாய்ந்த எம்பெருமான் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியைக் கடை கயிறாகப் பூட்டித் தேவரசுரர்களாலும் தனது திருக்கைகளாலும் இடமும் வலமுமாக இழுத்துக்கடைந்து இக்கடலில் நின்றும் அமிர்தத்தை வலிய எடுத்துக்கொண்டு போய்விட்டான்; அவ்வமுத்தை மீண்டும் தன் வலியால் வாங்கிக் கொள்ளமாட்டாத இக்கடல் (‘வலியாரிடத்து வலிமைகாட்ட மாட்டாதவன் எளியாரை வலிந்து நலிவன் என்னுமாபோலே) மெல்லியலான என்னிடத்தே தன் வலிமைகாட்ட வேண்டி, யான் வியாபாரிகளிடத்து விலைகொடுத்து வாங்கிக்கொண்ட சங்கு வளைகளைத் தான் வலியக் கவர்ந்துகொண்டு போகக் கருதி, அதற்குத் தன் வலிமை போதாதென்று திருத்துழாயையும் துணைக்கொண்டு, ஜ்ஞாதிகள் தாயப்பொருளை வலியப் பெறும்பொருட்டு மேலெழுந்து வந்து போர்க்கும் அழைப்பதுபோல, தானும் தனது மிக்க வொலியால் என்னை அறைகூவுகின்றது’ என்று தன் ஆற்றாமையை வெளியிடுகிறாள்.
‘வேரித்துழாய் துணையா’ என்றதன் கருத்து யாதென்னில்: எம்பெருமானது திருத்துழாய் மாலையினிடத்து யான் ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் தளருஞ்சமயம் நோக்கித் தானும் என்னை வருத்தத் தொடங்கிற்று என்றவாறு. அவனது திருத்துழாய்ப் பிரசாதம் என் கைக்கு எட்டாமல் என்னை எப்படி வருத்துகின்றதோ அப்படியே இக்கடல் தானும் வருத்தா நின்ற தென்கிறாளென்க. (துலைகொண்டு) திருத்துழாயைத் துணை கொள்ளாதபொழுது எனக்கு எதிராகமாட்டாதது, அதனைத் துணைகொண்ட பின் எதிராய் வந்ததென்றபடி, இயற்கையில் வாலியினும் வலிமை குறைந்த ஸுக்ரீவன் இராமபிரானைத் துணைகொண்டபின் அத்துணை வலிமையால் வாலிக்கு எதிராய் மேற்சென்று குரல் காட்டித் தாயாகித் தன்மை தோளார் வலியப் போருக்கு அழைத்தாற்போல, அன்றி,‘துலைகொண்டு’ என்பதற்கு- (என்னைத்) துளைத்தலைக்கொண்டு- (என்னை) அழித்திட வேணுமென்று உட்கொண்டு என்று உரைக்கவுமாம். துலைத்தல் எனினும் தொலைத்தல் எனினும் ஒக்கும். தொலைத்தல், தொடர்தல், தொடங்கள்- தொளை, தொடை இச்சொற்கள் ஏட்டுப் பிரதிகளில் பெரும்பாலும் நுகர முதலனவாக எழுதப்பட்டுள்ளன வென்பது உணரத்தக்கது.
துழாய் துணையாத் துலைகொண்டு (கடலானது) தன்னை வருத்திய அவனைத் தான் ஒன்றும் எதிர்க்கமாட்டாது அவனது ஸம்பந்தமுள்ள திருத்துழாயினிடத்து நான் அன்புடையேன் என்று இவ்வளவே கொண்டு பகைமை பாராட்டி என்னை வருத்தத் தொடங்கிற்று என்றுங் கொள்வார். (தாயங்கிளர்ந்து கொள்வானொத்து) கிரயத்தால் நாலைந்து கை சென்றிட்ட பொருளையும் தாயாதிகள் எங்களதென்று சொல்லி, விடாமல் வழக்குத் தொடர்ந்து மீட்கப்பார்ப்பது போன்றுள்ளது. இதன் செய்கை. (அழைக்கின்றதே) இங்ஙனம் என்னை வருத்துகின்றது பிரிந்துசென்ற அவளையும் வருத்த வேண்டாவோ? கடல் அவனது திருமேனி நிறத்துக்கும், அதனொலி அவனது கம்பீரமான குரலொலிக்கும் போலியாய் வருத்தும்.
அலைகண்டு – அலையக்கண்டு; அலைத்து கொள்ளாது’ என்றதை வினைமுற்றாகவுங் கொள்ளலாம். வினையெச்சமாகவும் கொள்ளலாம். வினைமுற்றாகக் கொள்ளில், ‘கடல்’ என்னும் எழுவாய மத்தியதீபமாய் ‘கொள்ளாது’ என்றதனோடும் ‘அழைக்கின்றது’ என்றதனோடும் அநவயிக்கும்.
எம்பெருமானைச் சேரப் பெறாது வருந்துகின்ற ஆழ்வார் இவ்வுலகத்து ஸம்ஸார கோலாவனாத்தைக் கண்டு தளர்தல் இப்பாட்டுக்கு ஸ்வாபதேசம். கடல் என்றது ஸம்ஸாரமாகிற கடலைச்சொன்னபடி, ஸம்ஸார ஸாகரத்திலே சலனமில்லாத மனவுறுதியாகிய மந்தரமலையை நாட்டி அன்பாகிய கயிற்றைக் கொண்டு கடைந்து எம்பெருமான் தானே ஒரு கலக்கத்தை உண்டு பண்ணி இனியதான ஓராத்மாவை ஈடேற்றி யெடுத்துக்கொண்டு போய் அநுபவிக்கத் தொடங்கினால் அதனை மீட்டுக் கொள்ளவல்ல சக்தி இந்த ஸம்ஸாரத்துக்கு இல்லை; இத்தன்மையதான இந்த ஸம்ஸாரத்தின் ஆடம்பராமனது, எம்பெருமானது இனிமையில் எனக்கு உண்டான மிக்கவிருப்பத்தால் யான் 1. “கண்டாற்றெனுலகியற்கை கடல்வண்ணா. அடியேனைப் பண்டேபோற் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணிகொள்ளே” என்று ஆற்றாது விரையும்படி பகைமை காட்டி என்னை மிக வருத்துகின்றது என்றதாயிற்று. (பரதர்விலை கொண்டு தந்த சங்கமிவை கொள்வானொதது) ஸம்ஸாரத்தைக் கடக்க நீந்துகிற ஆசார்யரால் எனது சுச்ரூஷைகளுக்குத் தகுதியாகத் தரப்பட்டதும் என் கைசவமாகவுள்ளதுமான சுத்தஸ்வபாவத்தை மீட்டுக்கொள்ள முயல்கின்றது இந்த ஸம்ஸாரஸாகரம் என்றவாறு.
பரதர் = நெய்தல் நிலத்துப் புருஷர்களுக்குப் பாதர், வலையர், நுளையர் என்றும், அந்நிலத்து ஸ்தரீகளுக்குப் பரத்தியர், வளைச்சியர், துளைச்சியர் என்றும் பெயர்.
English Translation
The angry ocean, peeved on losing its ambrosia to the wonder-lord who churned it with a mount-and-snake, calls me for a flight, like a contender, claiming as its property, these bangles! brought from the share-gypsies and also takes the fragrant Tulasi on its side, alas!
