(2483)
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே.
பதவுரை
|
இது |
– |
இவ்வடிவானது |
|
தடாவிய |
– |
வளைந்த |
|
அம்பும் |
– |
பாணங்களையும் |
|
முரிந்த |
– |
ஒடிந்த |
|
சிலைகளும் |
– |
விற்களையும் |
|
போகவிட்டு |
– |
கொள்ளாமல் ஒழித்து |
|
கடாயின கொண்டு |
– |
உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற |
|
வல்லி எனும் |
– |
ஒரு பூங்கொடி போன்ற பெண்வடிவமாயிருந்தாயினும் |
|
அசுரர் மங்க |
– |
அஸுரர்கள் அழியும்படி |
|
கடாவிய |
– |
ஏறி நடத்தப்படுகின்ற |
|
வேகம் |
– |
விரைவையுடைய |
|
பறவை |
– |
பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு |
|
இன் பாகன் |
– |
இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற) |
|
மதனன் |
– |
மன்மதனுடைய |
|
செங்கோல் |
– |
ஆளுகையை |
|
நடாவிய |
– |
நடத்துகிற |
|
கூற்றம் |
– |
யமனாயிருக்கும்; |
|
ஞாலத் துள்ளே |
– |
இந்நில வுலகத்திலே |
|
கண்டீர் |
– |
(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே! |
|
உயிர் காமின்கள் |
– |
(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஜ்ஞாநஸாதனங்களால், சிறந்து அமைதியோடிருக்கிற ஆழ்வாருடைய ப்ரபாவத்தைக் கண்ட அன்பரான பாகவதர் திருவுள்ள முகர்ந்து உலகத்தாரை நோக்கி ‘இவ்வாழ்வார் தம்மையடுக்கிற ஸம்ஸாரிகளை இவ்விருள் தருமாஞலாப் பிறப்பு நீக்கி முந்தராகச் செய்ய வல்லவர்; நீங்கள் ஸம்ஸாரத்திலேயே நிலைத்திருக்க விரும்புவீராயின், ஊரும் நாடு முலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவர்க்கு வசப்படாமல் தப்பிப் பிழையுங்கள்’ என்று ஆழ்வார் தமது மஹிமையை வியந்து கூறும் பாகவதர் பரசுரமான உள்ளுறை பொருளமைந்த இப்பாட்டு- ஒரு நாயகியின் அழகிய வடிவத்தைக் கண்டு அதனிடத்து ஈடுபட்ட நாயகன் உலகத்தாரை நோக்கி ‘இவ்வடிவம் மேலெழப்பார்ப்பதற்கு ஒரு மெல்லியல் வடிவமாகத் தோன்றினாலும் உண்மையில் மன்மதனுடைய ஆஜ்ஸஞயை முழுவதும் தவறாமல் செலுத்துகிற ஒரு ம்ருத்யுவாகும்; இந்த உலகத்திலே ப்ரஸித்தனான ம்ருத்யுவைத் தப்பினாலும் தப்பலாம், இந்த ம்ருத்யுவைத் தப்புதல் அரிது; இது கண்டவர்களுயிரைத் தன்வசமாக்கிக் கொள்ளுந் தன்மையுடையதாதலால் உங்களுயிரை இதன் பக்கம் இழக்காமல் நீங்கள் குறிக்கொண்டு காத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் பாசுரமாக அமைக்கப்பட்டது. முற்கூறிய ஸ்வாபதேசார்த்தத்தில், தலைமகள் – ஆழ்வார்; தலைமகன்- பாகவதர்.
கீழ் எம்பெருமானைத் தலைமகனாகக் கூறிவந்தவர் இங்கு ஸ்ரீவைஷ்ணவர்களைத் தலைமகனாகக்கொள்ள வேண்டும்படி பாசுரமருளிச் செய்யலாமோ! எனில்; கிளவித்தலைமகன் என்றும் பாட்டுடைத் தலைமகன் என்றும் இரண்டு தலைமகன் அமைவதுண்டு; (இது இறையனா ரகப் பொருளுரையாலும் விளங்கும்.) ஆழ்வார் எம்பெருமான் பக்கலிற்போல அவனது ஸம்பந்தம் பெற்ற அடியார்களிடத்திலும்மிக்க பக்திகொண்டு அவர்களையும் தமக்குத் தலைவராகக்கொள்ளுந் தகுதியுடையவரென்பது. “மாயப்பிரானடியார்கள் குழாங்களை- உடன் கூடுவதென்று கொலோ” இத்யாதி ஹஸூக்களில் விளங்குவதால் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாகக் கொள்ளலாம். எம்பெருமான் எப்போதும் பாட்டுடைத் தலைமகன்.
“தடாவியம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டுக் கடாயின கொண்டு ஒல்கும் வல்லி இதேனும்”= வல்லி என்றது பெண்மகளைச் சொன்னபடி. இங்கு, பராங்குசநாயகியைச் சொன்னவாறு, கொன்கொம்பை ஆதாரமாகப் பற்றியல்லது தானே நிலைத்திருக்க மாட்டாத கொடிபோல ஆழ்வார் எம்பெருமானைப் பற்றியல்லது தரியாநு பரவசப்பட்டிருப்பதென்பது இதனால் வெளியாகும். உபயோகமற்ற அம்புகளையும் சிலைகளையும் நீக்கி நல்ல அம்புகளையும் சிலைகளையும் கொண்டதாகச் சொல்லுகிறவிதற்கு உட்கருத்து யாதெனில்; பிராதிருதர்களுடைய மாறுபடும் இயல்புடைத்தான அறிவென்ன உபாயமென்ன இவற்றிற் காட்டிலும் ஆழ்வாருடைய நிலைத்த ஞானசாதனங்களுக்கு உள்ள மேன்மை கூறியவாறு, இதுவே பின்னடிகளில் விவரிக்கப்படுகிறது; (அசுரர்மங்க இத்யாதி.) கொடுந்தன்மையுடைய மதாந்தரஸ்தர்களை அசுரர் என்கிறது. அவர்கள் நிலை கெடும்படி உபயோகிக்கப்படுகிற சிறந்த பிரமாணமான வேதத்துக்குத் தலைவனான எம்பெருமான் திறத்தில் மிகுந்த காதலையுண்டாக்கி முக்திபெறுவித்து அதனால் ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு ஒரு யமனாகவுள்ளவர் ஆழ்வார் என்கை.
கண்டீர்! உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே = உலகத்தில் ஆழ்வாரை ஸேவிக்கப் பெற்றவர்களில் எவரும் ஸ்வதந்த்ராயிருக்க முடியாது; எல்லாரும் அநந்யார்ஹ சேஷத்வமாகிற ஸ்வரூபத்தைப் பெற்றவர்களாவர்; அப்படியாக்குவதற்காகவே இவரது திருவவதாரம்; அப்படி ஸ்வரூபம் பெறாமல் நித்யஸம்ஸாரிகளாயின் இவருடைய கடாக்ஷத்துக்கு இலக்காகாதபடி ஒழிந்து போங்கள் என்றவாறு, ஸ்வாபதேசத்தில் ஞானமென்று கொள்ளப்படுகிற கண்ணுக்கு, குறிதவறாது எய்யும் அம்பை உவமை கூறியதனால், இவரது ஞானம் பரம்பொருளைத் தவறாது பற்றுந்தன்மையது எனக் குறித்தபடியாம். வில்லானது அம்பைச் செலுத்துங் கருவியாதலால் ஸ்வாபதேசத்தில் அது ஞானசாதனங்களைக் குறிக்கும். ஞானமாகிய அம்புக்கு வளைவாவது வியாந்தரங்களிற் செல்லுதல், ஞான சாதனங்களாகிய விற்களுக்கு ஓடிவருவது ஒருகால் தவறிப்போதல். இங்ஙனங் கெடுதலில்லாது நிலைபெற்ற ஞானசாதனங்களையுடையவரென்பது தோன்ற ‘கடாயின கொண்டு’ என்றது. ‘கண்டீ குயிர்காமின்கள் ஞாலத்துள்ளே’ என்றது- ஆழ்வாரை ஸேவிக்கவே ஸம்ஸாரம் அடியற்றுப்போம் என்றவாறு.
இனி அந்யாபதேப்பொருளில் சில விவரணங்கள் செய்வோம்; – இந்த நாயகியானவள் மன்மதனுடைய ஆணையை உலகத்தில் தவறாது நடத்தும்பொருட்டு நல்ல அம்புகளையும் சிலைகளையும் கொண்டான்; மற்ற ஸ்திரீகளின் கண்புருவங்களினது அழகிற் காட்டிலும் இவளுடைய கண்புருவங்களின் அழகு சிறந்தது: மன்மதனது அம்பும் சிலையும் வளைந்தொழியக் கூடியன என்று கருதி அவற்றையொழித்துத் தன் கண்புருவங்களையே தக்க அம்பு சிலைகளாகக் கொண்டு உலாவுவாள் இவள். (மன்மதனது ஐந்து புஷ்ப பாணங்களிலும் ஒரு கருப்பு வில்லினும் இவளது இரு கண்பார்வையும் இருபுருவங்களும் வேட்கையை விளைவிப்பதில் சிறப்புடையன என்பது தொனிக்க இங்ஙனே கூறப்பட்டது)
கண்ணபிரானது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப் பிராட்டியிடம் மன்மதன் ப்ரதியும்கனென்னுங் குமாரனாகத் தோன்றினானெப்பதுபற்றி மன்மதன் திருமாலின் மகனாதலால் ‘பறவையின் பாகன் மதனன்’ எனப்பட்டது. (தொக்கி நின்ற ஆறாம் வேற்றுமையுருபின் பொருள்- பித்ருபுத்ரபாவரூப ஸம்பந்தமாம்.) உலகத்துப் பொருள்களெல்லாவற்றையும் எம்பெருமானோடு ஒருவகையான ஸம்பந்தமுடையன வென்றல்லது சொல்லறியாத அன்பு மிகுதியால், வேட்கைவிலைத்து வருந்துபவனான மன்மதனையும் அவனது ஸம்பந்தத் தோற்றக் கூறுகிறபடி, மன்மதனுக்குச் சேனையெனப்படுகிற மாதர்களுள் சிறந்தவளான இவள் அவனது சேனைத் தலைவியாய் ஆங்காங்குச் சென்று மரணபரியந்தமான காமவேதனையை உயிர்களுக்கு உண்டாக்கி இங்ஙனம் மன்மதனாணையைச் செலுத்துபவளென்பது தோன்ற ‘மதன செங்கோல் நடாவிய கூற்றம்’ என்றது. “மீன்சேர் குழாமனைய மேகலையும் வெம்முலையும் கூற்றங் கூற்றம், ஊனசே ருயிய்யக் கொண்டோடிய போமின்களுரைத்தோம்” என்றும், “இக்கொடியை யின்றாள் போலும், கொன்வானுலகுக்கோர் கூற்றீன்றாளம்மவோ கொடியவாறே” என்றுமுள்ள சீவகசிந்தாமணிச் செய்யுள்கள் இங்கு நினைவுக்கு வரும்.
‘கடாலின்’ என்பது ‘கடாயின’ என்று விகாரப்பட்டது: இது பெயரெச்சமன்று, பெர். மதனின் + செங்கோல், மதன செங்கோல். நடாவிய = ‘நடவிய’ என்பதன் விகாரம்; வு- பிற வினை விகுதி.
இப்பாட்டால்- ஆழ்வார், நான் ஸம்ஸாரிகளை வாரிப் பிடியாகப் பிடித்துக்கொண்டு போக வந்திருக்கிறேன்; இக்காரியத்திற்காக எம்பெருமானும் சில அவதாரங்கள் செய்தானெனினும் அவனுடைய ஸாதனங்கள் தவறிப்போயின; என்னுடைய ஸாதனங்கள் அங்ஙனம் தவறிப்போகமாட்டா; எனது நோக்குக்குத் தப்பிப் பிழைக்க விருப்பமுடையீர்! தப்புங்கள்; மற்றையோரத் தவறாது திருத்திப்பணிக்கொள்வேன்- என்றாராயிரத்து.
English Translation
From the litter of Madana’s bent arrows and broken bows. She salvages the good ones. Looking like a pale creeper she retreats, but only to return. Run for your lives, ye world! She will strike death with Madana’s screptre, on the fast bird-rider, Asura killer lord.
