(2374)

(2374)

நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,

அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு

வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,

உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.

 

பதவுரை

நெஞ்சே

ஓமனமே!

நீண்ட

(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து

திருமால்

ச்ரிய பதியானவனும்

கனைத்து உலவு வௌளத்து

கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே

ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி

ஒப்பற்ற சிறு குழந்தையாய்

அனைத்து உலகும

உலகங்களை யெல்லாம்

உள் ஒடுக்கி

திருவயிற்றினுள்ளே அடக்கி

ஆல் மேல்

ஆலந்தளிரின் மேலே

மெள்ள துயின்றானை

மெள்ள சயனித்துக்கொண்டவனுமான பெருமானை

உய்த்து

சாரணாக அநுஸந்தித்து

உள்ளத்தே  வை,

தியானிக்கக் கடவாய்

உலகில்

இவ்வுலகில்

நினைத்து

(அப்பெருமானை) அநுஸந்தித்து

ஆர் தெளிவார்

தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீண்டதிருமால் –அப்ரமேயமான பெருமைபொருந்திய திருமால் என்னவுமாம்.

 

English Translation

O Heart! The Lord who rose fall, lay as a child in the ocean, keeping the seven worlds within himself, floating on a big leaf, and slept peacefully, who can realise him in this world? Bring him carefully inside. O Heart?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top