(2374)
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், – கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து.
பதவுரை
|
நெஞ்சே |
– |
ஓமனமே! |
|
நீண்ட |
– |
(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து |
|
திருமால் |
– |
ச்ரிய பதியானவனும் |
|
கனைத்து உலவு வௌளத்து |
– |
கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே |
|
ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி |
– |
ஒப்பற்ற சிறு குழந்தையாய் |
|
அனைத்து உலகும |
– |
உலகங்களை யெல்லாம் |
|
உள் ஒடுக்கி |
– |
திருவயிற்றினுள்ளே அடக்கி |
|
ஆல் மேல் |
– |
ஆலந்தளிரின் மேலே |
|
மெள்ள துயின்றானை |
– |
மெள்ள சயனித்துக்கொண்டவனுமான பெருமானை |
|
உய்த்து |
– |
சாரணாக அநுஸந்தித்து |
|
உள்ளத்தே வை, |
– |
தியானிக்கக் கடவாய் |
|
உலகில் |
– |
இவ்வுலகில் |
|
நினைத்து |
– |
(அப்பெருமானை) அநுஸந்தித்து |
|
ஆர் தெளிவார் |
– |
தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நீண்டதிருமால் –அப்ரமேயமான பெருமைபொருந்திய திருமால் என்னவுமாம்.
English Translation
O Heart! The Lord who rose fall, lay as a child in the ocean, keeping the seven worlds within himself, floating on a big leaf, and slept peacefully, who can realise him in this world? Bring him carefully inside. O Heart?
