(2337)

(2337)

நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,

இறையுருவம் யாமறியோ மெண்ணில், – நிறைவுடைய

நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,

பூமங்கை கேள்வன் பொலிவு.

 

பதவுரை

இறை

ஸர்வேச்வரனுடைய

உருவம்

திவ்யமங்கள விக்ரஹமானது

நிறம்

நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)

செய்து

சிவந்திருக்குமோ, (அல்லது)

பசிது

பச்சென்றிருக்குமோ, (அல்லது)

கரிது

கறுத்திருக்குமோ,

என்று

எவ்வண்ணமா யிருக்குமென்று

எண்ணில்

ஆராயுமிடத்தில்

யாம் அறியோம்

நாம் அறியமாட்டோம் (இது நிற்க)

நிறைவு உடைய

ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான

நா மங்கை தானும்

ஸரஸ்வதீ தேவியும்

பூ மங்கை கேள்வன்

பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய

பொலிவு

பூர்த்தியை

நலம் புகழ வல்லனே

நன்றாகப் புகழ சக்தி யுடையவனோ

(அல்லன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும் புறம் போலுநீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம் நீல நீர்மை“ என்றும் 2. “நிகழ்ந்தாய் பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்“ என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொண்டிருப்பதாக நூல்கள் கூறுகின்றனவாயினும், 3. “என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை“ என்று கட்புலனுக்கு இலக்காக மாட்டாததாகச் சொல்லப்படுகிற எம்பெருமான் திருவுருவத்தின் நிறத்தை நான் ஒன்றுமறியேன், நானே அறியாதபோது ஸரஸ்வதிதானும் அறிந்து பேசவல்லளோ? ஏனென்னில்? (பூமங்கை கேள்வன் பொலிவு) மாரீசன் இராவணனுக்கு ஹிதோபதேசம் பண்ணும் போது மர்மறிந்து சொன்ன சொல் அறியீர்களோ? “***“ அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா“ என்றானே, (அதாவது) இராமனென்பவன் பிராட்டியைக் கைப்பிடித்த பரஞ்சோதியன்றோ? அச்சோதி நெஞ்சாலும் நினைப்பரிதன்றோ என்றானே ஆகையாலே, பூமங்கை கேள்வனானவனுடைய பொலிவைப்புகழ யாராலாகும்? என்கிறார்.

 

English Translation

The Lord’s hues are white, red, yellow-green and also black, but we do not know the first three.  Come to think, can even the knowledge-filled Dame Sarasvati fully describe the spouse-of-Dame-Lakshmi’s glory?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top