(3899)

(3899)

மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்

அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்

துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்

நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே.

பதவுரை

மணி தடத்து அடி

அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்

அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான
மலர் கண்கள்

தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும்
உறை

நித்தியவாம் பண்ணுமிடமான
பவளம் செவ்வாய்

பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்
பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்

சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது
அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்

அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும்
நணித்து நாம் அடைந்தனம்

இதனை நாம் பஜிக்கப் பெற்றோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *…….. நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார். தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அப்போதலர்ந்த செந்தாமரை போலேயிருக்கிற திருக்கண்களையும் பவளம் போலே சிவந்த திருவதரத்தையுமுடையனாய் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கவல்ல நான்கு திருத்தோள்களை உடையனாய் அத் திருத்தோள்களுக்கு இரை போரும்படியாக எதிரிட்டு வருகிற அசுரர்களைத் துணிக்குமவனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமாய் சோலைகள் சூழ்ந்ததான திருமோகூரிப்பதியானது கட்டிற்று; இதுவே நமக்கு ரக்ஷகம்; ரக்ஷகம் தேடி நிற்கிற நாம் கிட்டப் பெற்றோம் இத்திருப்பதியை என்றாயிற்று.

English Translation

The lovely lake-and-grove Tirumogur is now close of hand.  Here resides the warrior Lord with four arms that overpower Asuras.  We have attained our fortress.  The Lord with lake-like feet, lotus eyes and coral lips!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top