(2276)
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், – முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
பதவுரை
|
தானவனை |
– |
இரணியனாகிற அகரனுடைய |
|
வல் நெஞ்சம் |
– |
வலிய மார்வை |
|
கீண்ட |
– |
கிழித்தொழித்தவனும் |
|
மணி வண்ணன் |
– |
நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும் |
|
முன்னம் செய் ஊழியான் |
– |
நெடுங்காலமாக வுள்ளவனும் |
|
ஊழி பெயர்த்தான் |
– |
காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும் |
|
உலகு ஏத்தும் ஆழியான் |
– |
உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும் |
|
அத்தியூரான் |
– |
ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான் |
|
என் நெஞசம் மேயான் |
– |
என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான் |
|
என் சென்னியான் |
– |
என்னுடைய தலையிலே உள்ளான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும்.
‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும், அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும், உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும் வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.
திருவாய்மொழியில் “இவையு மவையு முவையும்“ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும் எம்பெருமான் வந்து சேர்ந்ததாக அநுஸந்தித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸந்தேயம், நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களை மாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உபலக்ஷணமென்க.
ஸ்ரீஹஸ்திகிரியின் கீழே நரஸிம்ஹ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமானைத் தானவனை வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறாரென்னலாம்.
முன்னம் சேயூழியான் – ‘சேய்‘ என்றது வெகுதூரம் என்றபடி. ஊழியாவது காலம். முன்னமேபிடித்து வெகுதூரமான காலத்திலு உள்ளான் எனவே, அநாதிஸித்தன் என்றதாம்.
ஊழி பெயர்த்தான் –இங்கும் ஊழியென்று காலத்தைச் சொல்லுகிறது. பரமபதமாகிய நித்யவிபூதியில் காலமென்பது கிடையாது, அஃது உள்ளது இவ்விபூதியில் மாத்திரமே ஆகவே, இங்குக் காலத்தைச்சொன்னது மற்றும் இவ்விபூதியிலுள்ள வஸ்துக்களையெல்லாம் சொன்னபடி. பெயர்த்தல் – உண்டாக்குதல். “உலகேத்து மாழியான்“ என்பதற்கு –உலகம் புகழும் திருவாழி யாழ்வானையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.
அத்தியூரான் – ‘ஹஸ்தி‘ என்னும் வடசொல் அத்தியெனத்திரியும். ஹஸ்திக்ஷேத்ர மென்றபடி. “***“ –என்று ஹஸ்திகிரி மஹாத்மியத்தில் முதலதயாயத்திற் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பண்டு இந்த க்ஷேத்ரத்தல் திக்கஜங்கள் வந்து ‘எம்பெருமானை ஆராதித்தமையால் அதுபற்றி ஹஸ்திகிரி யென்று திருநாம்மாயிற்றாம். மற்றும் சில வகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.
English Translation
My heart’s permanent resident has his feet on my head, He is the gem-hued Lord who destroyed the Asura’s chest. the first-cause lord of deluge and creations, the discus-wielder, the resident of Attiyur, Kanchi.
