(2267)
நவின்று ரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், – பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
பதவுரை
|
நவின்று உரைத்த |
– |
(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற |
|
நாவலர்கள் |
– |
கவிகள் |
|
நாள் மலர் கொண்டு |
– |
அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு |
|
ஆங்கே பயின்று |
– |
அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து |
|
அதனால் பெற்ற பயன் என்சொல் |
– |
அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ |
|
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.) |
||
|
பயின்றார் தம் |
– |
நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய |
|
மெய் தவத்தால் |
– |
சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால் |
|
காண்பு அரிய |
– |
காணமுடியாதவனும் |
|
மேகம் மணி வண்ணனை |
– |
மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை |
|
யான் |
– |
அடியேன் |
|
இன்று |
– |
இப்போது |
|
எத் தவத்தால் கொல் காண்பன் |
– |
எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்? (அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானைக் காணவேணுமென்று சிலர் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவதுண்டு, எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு, இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற ஸாதநாநுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில். எம்பெருமான் தானே தனது நிரஹேதுகிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன், வேறு எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன், ஆகையாலே, ஸாதநாநுஷ்டாநம்பண்ணிக் காண்கிறவர்கள் என்னோடு ஓப்பர்களோ? என்கை.
நாம் ஒரு உபாயத்தை அநுஷ்டித்தே எம்பெருமானைப் பெறவேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால் ஸந்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும் உபாயாநுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன-முன்னடிகள்.
அப்படி உபாயாநுஷ்டநாம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனான எம்பெருமானைத் தாம் கண்டபடியையும், ‘அப்படி கண்டது ஒரு தவத்தினாலன்று, அவனது நிர்ஹேதுக கிருபையினாலே‘ என்பதையும் தெரிவிப்பன – பின்னடிகளில்.
தவம் – உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று – நான் ஒரு ஸாதநமும் அநுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு.
English Translation
Learned praise-singers offer worship with flowers and receive the grace of the cloud-hued gem Lord, while those who perform penances find it difficult to see him. By what penance shall I see him now?
