(2254)
ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும், – ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்காட் படத்துணிந்த யான்.
பதவுரை
|
பிறை ஏய்ந்த கோடு |
– |
சந்திரகலை போன்ற தந்தரத்தையும் |
|
செம் கண் |
– |
சிவந்த கண்களையுமுடைய |
|
கரி |
– |
கஜேந்திராழ்வானை |
|
விடுத்த |
– |
முதலைவாயில் நினறு விடுவித்தருளின |
|
பெம்மான் |
– |
ஸர்வேச்வரனான |
|
இறைக்கு |
– |
ஸ்ரீமந் நாராயணனுக்கு |
|
ஆள்பட |
– |
அடிமை செய்ய |
|
துணிந்தயான் |
– |
உறுதிகொண்டயேன் |
|
ஆதி நடு அந்திவாய் கைகலும் |
– |
காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும் |
|
வாய்ந்த மலர் |
– |
கிடைத்த புஷ்பங்களை |
|
ஆயிரம் பேர் |
– |
அமிரத் திரநாராணகளையும் |
|
உய்ந்து உரைப்பான் |
– |
ஆராய்ந்து |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் ஸ்ரீக்ஜேந்திராழ்வான் திறத்தில் வெளியிட்டருளின. அநுக்ரஹத்தை நோக்கின பின்பு, நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுகரஹத்திற்கு நாமும் பாத்திரமாகலாமன்றோ பென்று சூடு எப்பொதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய ஸஹஸ்ரபோக்கைச் சொல்லிக் அதுநுஸந்திப்பதுமாயிராதியன்றேனென்று தம்முடைய போதுபொக்கைச் சொல்லிக் கொண்டாராயிற்று.
“ஆதி நடு அந்திவாய்“ என்று மூன்று காலங்களை யெடுத்துரைத்தது எல்லாக்காலங்களிலு மென்றபடி.
ஆயந்து உரைத்தலாவது – அர்த்தாநுஸந்தாநத்துடன் சொல்லுகை, “வாய்ந்தமலர் தூவி“ என்றதனால் – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேணுமாகில் இன்ன புஷ்பந்தான் ஸமர்ப்பிக்கவேணு மென்று சிரமப்பட்டுத் தேடவேண்டிய நிர்ப்பந்தமில்லை, எந்தப்புஷ்பம் கையில் கிடைக்கிறதோ அதுவே போதுமானது இது எம்பெருமானுக்கு என்றும் பிரதிபத்தி யொன்றே வேண்டுவது என்பது வெளியாம்.
ஏய்ந்த பிறைக்கோடு – யானையின் தந்தத்திற்குப் பிறையை உவமை கூறுதல் “கானக்களியானை தன் கொம்பிழந்து நிற்குங் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்ற பெரியாழ்வாரது வரணனையிலுங் காணத்தக்கது.
செங்கண்கரி – யானையின் கண்ணுக்குச் செம்மைநிறம் இயற்கையன்று, முதலையின் மீது கோபத்தினால் வந்தேறியானதென்க. “கரிவிடுத்த பெம்மான்“ என்றவிதனை கஜேந்திரமோக்ஷபரமாக உரைத்தலின்றியே கம்ஸனுடைய யானை யான குவலயாபீடத்தின் நிரஸநத்தைக் கூறுவதாக உரைத்தலுமொக்கும், கரிகுவலயாபீட யானையை, விடுத்த – தொலைத்த.
English Translation
The Lord who destroyed the red-eyed tusker is my master. I am prepared to serve him. I shall collect flowers thrice a day, and patiently recite the thousand names of the Lord.
