(2247)
இதுகண்டாய் நன்னெஞ்சே! இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, – இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
பதவுரை
|
நல் நெஞ்சே |
– |
நல்ல மனமே! |
|
இப்பிறவி ஆவது இது கண்டாய் |
– |
இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப்பட்டது காண். |
|
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய் |
– |
(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண் |
|
நாரணன் |
– |
ஸ்ரீமந் நாராயணனுடைய |
|
பேர் |
– |
திருநாமங்களை |
|
ஓதி |
– |
ஸங்கீர்த்தனம் பண்ணி |
|
நாகத்து |
– |
ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய |
|
அருகு |
– |
ஸமீபத்திலும் |
|
அணையா காரணமும் |
– |
நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும் |
|
இது கண்டாய் |
– |
இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்; |
|
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி) |
||
|
வல்லை ஏல் |
– |
நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில் |
|
காண் |
– |
எல்லாம் தெரிந்து கொள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்குஉரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார். நன்னெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்துகொண்டிருக்கிறாயா? என்கை.
நாம் உற்றதெல்லாம் இதுகண்டாய் – இதுவரையில் நாம் ஸுகதுக்கங்களை மாறி மாறி அநுபவித்து வருகிறோமே, அதற்குகாரணம் அந்த ஸம்ஸாரமேகிடாய் என்கை.
நாரணன் பேரோதி நரகத்தருகளையாக் காரணமும் இது கண்டாய் – நித்யவிபூதியில் ஒரு முலையிலிருந்துகொண்டு ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரகப்ரணமான இந்நிலத்தின் அருகிலும் அஞகாதிருக்கவேணுமென்று இவ்விருள் தருமா ஞாலத்தில் நாம். வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம் – என்கை. (இவ்விபூதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரசு மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்)
கல்லையேல் காண் – உலகத்தில் மறைபொருளாக இருக்குமவற்றை ஒருவர் எடுத்துக்காட்டவேணுமே யன்றி, கண்ணெதிரே நன்கு புலப்படும் விஷயங்களை எடுத்துக்காட்டவேண்டுடிய அவசியமில்லை, இந்த ஸம்ஸாரத்தில் தோஷம் மறைவானதல்ல, நீயே பிரத்யக்ஷமாகக் காணலாம், பாபத்தாலே கண் குருடானால் ஸம்ஸார தோக்ஷம் தெரியமாட்டாலும் அப்படியன்றயே, நீ காணவில்லையேல் நீயே நன்கு கண்டுகொள் என்றவாறு.
இப்பாட்டின் கருத்தை மற்றும் பலவகையாகப் பண்ணி யுரைக்கலாம்.
English Translation
You too, O Good Heart! Have good sense to know that this, this, is the cause of cyclic births; this, this, is the effect of our actions; and that the name of Narayana alone can ensure safety from hell for us.
