(2245)

(2245)

கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே,

இதய மிருந்தவையே ஏத்தில், – கதையும்

திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,

பருமொழியால் காணப் பணி.

 

பதவுரை

கண்ணா

கண்ணபிரானே!

கதையும்

இதிஹாஸ புராணங்களும்

பெரு பொருளும்

அவற்றின் சிறந்த அர்த்தங்களும்

இதயம்

அவற்றின் தாற்பரியமும்

இருந்த வையே

உள்ளது உள்ளபடியே

ஏலத்தில்

அறிந்து துதித்தால்

நின் பேரே

(அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்

கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே

இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!

உன்னை

உன்னை

பருமொழியால் காண

பரிபூர்ண சப்தங்களாலேகண்டு அது பவிக்கும்படி

பணி

திருவுள்ளம் பற்றிவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்த லீலாவிபூதியில் இருந்துகொண்டு, உன்னுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றைப் பிரதிபாதிக்கின்ற இதிஹாஸ புராணமுகமாக உனது திருநாம ஸங்கீர்த்தனமாகிற பாக்கியம் எனக்கு வாய்ந்தாலும், நித்ய விபூதியில் வந்து சேர்ந்து “ஹாவு ஹாவு, அஹமந்த மஹமந்த அஹமந்நாதோ ஹமந்நாதோஹ மந்தாத“ என்று வாய்விட்டுப் பேசியநுபவிக்கும் படியான பூர்ணாநுபவத்தை எனக்குத் தந்தருளவேணுமென்கிறார்.

கதை என்ற ஸாமாந்யசப்தம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களென்று விசேஷப்பொருள் பெற்றுநிற்கும். ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹாபாரதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாத்மம் முதலான புராணங்களையும் மூலம்மாத்திரமே அநுஸந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அநுஸந்தித்தாலும், அவற்றின் உட்கருத்தைக் கண்டறிந்து அநுஸந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய திருநாமங்களேயாயிருக்கு மென்பதில் ஸந்தேஹமில்லை, ஏனென்றால், கதையின் திருமொழியாய் நின்றதிருமாலே! – அந்த இதிஹாஸ புராணங்களின் அக்ஷரங்களாக அமைந்துள்ளவன் நீயே யாதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அநுஸந்திப்பதும் உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தநமாகக் குறையில்லை யென்றவாறு.

ஆனால் இவ்வளவிலே நான் திருப்திபெறக் கூடவில்லை, பரமபதத்திலே முக்தர்களும் நித்யர்களும் பெருமிடறுசெய்து சொல்லுகிற சப்தராசிகளுண்டே ‘ஹாவுஹாவுஹாவு‘ முதலியன – அவற்றைக்கொண்டு உன்னை நான் அநுபவிக்கும் படி அருள்புரியவேணுமென்கிறது ஈற்றடி

இதயம் – ‘ஹ்ருதயம்‘ என்ற வடசொல்விகாரம் “கதையும் திருமொழியாய் நின்ற“ என்ற சிலருடையபாடமும் இருக்கலாம், கதையும் – சொல்லப்படுகிற என்கை, அவரவர்கள் சொல்லுகிற திவ்யஸூக்தி ஸ்வரூபமாக நிற்பவனே! என்றபடி.

 

English Translation

O substance of the epics, krishna O exalted language of the great epics.  Tirumal Grant that I may chant your names, and praise you with exalted words and see you in the depth of my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top