(2209)
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.
பதவுரை
|
எனை பலரும் |
– |
கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும் |
|
தேவாதி தேவன் எனப்படுவான் |
– |
தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும் |
|
மாகடலான் |
– |
பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும் |
|
முன் ஒரு நாள் |
– |
முன்பொருகாலத்தில் |
|
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது) |
||
|
மா வாய் பிளந்த |
– |
குதிரையுருக்கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட |
|
மகன் |
– |
சிறுபிள்ளை யானவனும் |
|
மற்றும் |
– |
பின்னும் |
|
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் |
– |
நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி |
|
வேங்கடத்தான் |
– |
திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன் |
|
(இப்போது) |
||
|
மனத்து உள்ளாள் |
– |
என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “கோல்தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன் திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.
தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார்.
இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவுசொல்லாகக் கொள்ளப்படும்.
தேவாதி தேவன் – வடசொல் தொடர்.
மாவாய்ப்பிளந்த வரலாறு – கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனாலேவப்பட்டிருந்த அஸுரர்களில் ஒருவனான தேசியென்பவன் குதிரையினுருவங் கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத் துரத்திக்கொண்டு கண்ணன் மேற்பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.
English Translation
The sky and Earth praise him as the lord of gods. The ocean reclining lord resides in venkatam, in the beautiful-beyond-imagination-Arangam and in the hearts of all. He ripped the horse’s jaws, as the Gokulam child.
