(2208)
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.
பதவுரை
|
பதி |
– |
திருமலைத் திருப்பதியிலே |
|
அமைந்து |
– |
வேரூன்றி நின்று |
|
நாடி |
– |
எங்கேயென்று தேடிக்கொண்டு |
|
பருத்து எழுந்த சிந்தை |
– |
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய் |
|
மதி உரிஞ்சி |
– |
சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு |
|
வான்முகடு நோக்கி |
– |
(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு |
|
(அங்கும் நில்லாமல்) |
||
|
மால்தேடி |
– |
பரமபதநாதனைத் தேடிக்கொண்டு |
|
கதிமிகுத்து ஓடும் |
– |
விரைவுமிகுந்து செல்லுகின்ற |
|
மனம் |
– |
என்னெஞ்சமானது |
|
அம்கோல் தேடி ஓடும் |
– |
அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற |
|
கொழுந்து அது போன்றது |
– |
கொடியை ஒத்திரா நின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.
முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும் எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கேயெங்கேயென்று திருமாலைத் தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரகத்தையுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.
English Translation
The heart that longs for the Lord and dwells on his form in vekatam grows like a creeper that seeeks the support of well grown trees, and quickly climbs to touch the moon in the sky.
