(2124)
மனமாசு தீரு மறுவி னையும் சார,
தனமாய தானேகை கூடும், – புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,
தாம்தொழா நிற்பார் தமர்.
பதவுரை
|
புனம் மேய பூ துழாயான் அடிக்கே |
– |
தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற திருத்துழையை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில் |
|
போதொடு நீர் ஏந்தி |
– |
(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு |
|
தொழா நிற்பார் தமர் தாம் |
– |
வணங்குமவர்களான பாகவதர்களுக்கு |
|
மனம் மாசு தீரும் |
– |
மனக்குற்றங்கள் விட்டு நீங்கும் |
|
அருவினையும் சாரா |
– |
(ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா: |
|
தனம் ஆய |
– |
(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் |
|
தானே கைகூடும்) |
– |
தனக்குத்தானே வந்து கைபுகுரும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாசுரத்திலருளிச்செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடியிருக்கையாலே ஒருவரும் தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ; அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார். ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலையிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு – மநஸ்ஸைப் பற்றிக்கிடக்கிய அஜ்ஞாநம் விஷயராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக்கழலும்; இவற்றுக்கு மூலகாரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்; ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.
மனம் , தனம் – வடசொல் விகாரம். பாகவதர்களுக்கு பகவத்பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘ தனமாய்’ என்றார்.
English Translation
The heart will be freed of dross, all past karmas will vanish, wealth will come of its own accord, -when the Lord of fresh Tulasi garland is worshipped with flowers and fresh water. Such is his grace on devotees.
