(2124)

(2124)

மனமாசு தீரு மறுவி னையும் சார,

தனமாய தானேகை கூடும், – புனமேய

பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,

தாம்தொழா நிற்பார் தமர்.

 

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே

தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற திருத்துழையை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்

போதொடு நீர் ஏந்தி

(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக்கொண்டு

தொழா நிற்பார் தமர் தாம்

வணங்குமவர்களான பாகவதர்களுக்கு

மனம் மாசு தீரும்

மனக்குற்றங்கள் விட்டு நீங்கும்

அருவினையும் சாரா

(ஸ்வப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீவினைகளும் அணுகமாட்டா:

தனம் ஆய

(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும்

தானே கைகூடும்)

தனக்குத்தானே வந்து கைபுகுரும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரத்திலருளிச்செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடியிருக்கையாலே ஒருவரும் தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ; அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார். ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலையிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு – மநஸ்ஸைப் பற்றிக்கிடக்கிய அஜ்ஞாநம் விஷயராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக்கழலும்; இவற்றுக்கு மூலகாரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்; ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.

மனம் , தனம் – வடசொல் விகாரம். பாகவதர்களுக்கு பகவத்பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘ தனமாய்’ என்றார்.

 

English Translation

The heart will be freed of dross, all past karmas will vanish, wealth will come of its own accord, -when the Lord of fresh Tulasi garland is worshipped with flowers and fresh water. Such is his grace on devotees.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top