(2122)

(2122)

குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்

இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்

புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்

திறனுரையே சிந்தித் திரு.

 

பதவுரை

என் நெஞ்சே

எனது மனமே!

என்றும்

எப்போதும்

புறன் உரையே ஆயினும்

(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும்

பொன் ஆழி கையான் திறன் உரையே

சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே

சிந்தித்து இரு

அநுஸந்தித்துக் கொண்டிரு;

(அப்படியிருந்தால்)

இன்று முதலாக

இன்று தொடங்கி

குன்று அனைய குற்றம் செய்யினும்

மலைபோல் (பெருப்பெருத்த குற்றங்களைச் செய்தாலும்

குணம் கொள்ளும்

(அவற்றையெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணத்திலீடுபட்டுப் பேசுகிறார்; நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத்தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு; அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்லவல்லோம்; அப்படி மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும். எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ] என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம்பற்றித் தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாயவிடுவன்; நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் 1. “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்; அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும் அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.

 

English Translation

Mountain-like faults will be ignored, only your good deeds will be taken into account, O Heart of mine! From this day onwards and forever, always contemplate and prate, -even if it were mere lip-service, -the glories of the discus wielder, the lord of Sri.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top