(2102)

(2102)

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,

சென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும்

படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,

அடையாழி நெஞ்சே அறி.

 

பதவுரை

சென்று நின்று

–

(மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று

அம் கை

–

(தனது) அழகிய திருக்கையினால்

நிலம் நீரேற்று

–

பூமிதானம்வாங்கி

மூ அடியால்

–

மூன்றடிகளாலே

திசை அளந்த

–

எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட

செம்கண்மாற்கு

–

செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு

என்றும்

–

எப்போதும்

ஆழி

–

சக்கரமானது

படை

–

ஆயுதமாயிருக்கும்;

புள்

–

கருடன்

ஊர்தி

–

வாஹனமா யிருப்பன்;

ஆழி நெஞ்சே

–

கம்பீரமான மனமே!

அறி

–

நான் சொல்வதை ஆராய்ந்துகொள்;

பாம்பு அணையான் பாதம் அடை

–

சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய  ஸெளசீல்யகுணத்தை உரைக்கின்றார். முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து – இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாஹனமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.

 

English Translation

Alas, O Dark Heart of mine! The Lord Senkanmal who went to Marbali and took a gift of land, then grew and measured the Earth, has a discus for weapon, a bird for vehicle and a serpent for a bed, You must attain his feet, know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top