(2102)
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்,
சென்று திசையளந்த செங்கண்மாற்கு, – என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,
அடையாழி நெஞ்சே அறி.
பதவுரை
|
சென்று நின்று |
– |
(மஹாபலியின் யாகபூமியிற்) போய் நின்று |
|
அம் கை |
– |
(தனது) அழகிய திருக்கையினால் |
|
நிலம் நீரேற்று |
– |
பூமிதானம்வாங்கி |
|
மூ அடியால் |
– |
மூன்றடிகளாலே |
|
திசை அளந்த |
– |
எல்லாயிடங்களையும் ஸ்வாதீனப் படுத்திக்கொண்ட |
|
செம்கண்மாற்கு |
– |
செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுக்கு |
|
என்றும் |
– |
எப்போதும் |
|
ஆழி |
– |
சக்கரமானது |
|
படை |
– |
ஆயுதமாயிருக்கும்; |
|
புள் |
– |
கருடன் |
|
ஊர்தி |
– |
வாஹனமா யிருப்பன்; |
|
ஆழி நெஞ்சே |
– |
கம்பீரமான மனமே! |
|
அறி |
– |
நான் சொல்வதை ஆராய்ந்துகொள்; |
|
பாம்பு அணையான் பாதம் அடை |
– |
சேஷசயனனான அப்பெருமானுடைய திருவடிகளை அடைந்திடு. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- [நின்றுநிலமங்கை.] தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெளசீல்யகுணத்தை உரைக்கின்றார். முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து – இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாஹனமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.
English Translation
Alas, O Dark Heart of mine! The Lord Senkanmal who went to Marbali and took a gift of land, then grew and measured the Earth, has a discus for weapon, a bird for vehicle and a serpent for a bed, You must attain his feet, know it.
