(2021)
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்
கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,
கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,
ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.
பதவுரை
|
மெய்நின்ற |
– |
பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற |
|
பாவம் |
– |
பாவங்கள் |
|
அகல |
– |
ஒழிவதற்காக |
|
கை நின்ற ஆழியான் |
– |
திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான |
|
திரு மாலை |
– |
திருமகள் கொழுநனுடைய |
|
சூழும் கழல் |
– |
ஸர்வ்வ்யாபியான திருவடிகளை |
|
சூடி |
– |
முடிமேற்கொள்ளுமவராய் |
|
கை நின்ற வேல் கை |
– |
கையும் வேற்படையுமாய் நிற்பவரான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை |
– |
சொல்மாலையாகிய |
|
ஐ ஒன்றும் ஐந்தும் இவை |
– |
இப்பத்துப்பாசுரங்களையும் |
|
பாடி |
– |
வாயாரப்பாடி |
|
ஆடுமின் |
– |
நர்த்தனம் பண்ணுங்கோள் |
English Translation
This garland of ten songs by sharp-spear-wielding kaliyan is an offering of the feet of the discus wielding Lord Tirumal, Devotees! Sing and dance, your bodily karmas will vanish.
