(2021)

(2021)

மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்

கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,

கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,

ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.

 

பதவுரை

மெய்நின்ற

பிரகிருதியிலே அநுபவிக்க வேண்டிநின்ற

பாவம்

பாவங்கள்

அகல

ஒழிவதற்காக

கை நின்ற ஆழியான்

திருக்கையில் பொருந்திய திருவாழியையுடையனான

திரு மாலை

திருமகள் கொழுநனுடைய

சூழும் கழல்

ஸர்வ்வ்யாபியான திருவடிகளை

சூடி

முடிமேற்கொள்ளுமவராய்

கை நின்ற வேல் கை

கையும் வேற்படையுமாய் நிற்பவரான

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி

அருளிச்செய்த

மாலை

சொல்மாலையாகிய

ஐ ஒன்றும் ஐந்தும் இவை

இப்பத்துப்பாசுரங்களையும்

பாடி

வாயாரப்பாடி

ஆடுமின்

நர்த்தனம் பண்ணுங்கோள்

 

English Translation

This garland of ten songs by sharp-spear-wielding kaliyan is an offering of the feet of the discus wielding Lord Tirumal, Devotees! Sing and dance, your bodily karmas will vanish.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top