(2014)
தூயானைத் தூய மறையானை, தென்னாலி
மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட
வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,
பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே.
பதவுரை
|
துயானை |
– |
பரமபவித்திரனும் |
|
தூய மறையானை |
– |
பரிசுத்தமான வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும் |
|
தென் ஆலி மேயானை |
– |
அழகிய திருவாலிப்பதியிலே பொருந்தி வாழ்பவனும் |
|
மேவாள் உயிர் உண்டு அமுது உண்டவாயானை |
– |
பொருத்தமற்றவளான பூதனையினுடைய உயிரை உறிஞ்சியுண்டு (அந்த விஷத்திற்குமாற்றாகத் தாயின்) முலைப்பாலமுதை உண்ட வாயையுடையவனுமான |
|
மாலை |
– |
திருமாலை |
|
வணங்கி |
– |
அடிபணிந்து |
|
அவன் |
– |
அப்பெருமானுடைய |
|
பெருமை |
– |
பெருமேன்மையை |
|
பேசாதார் |
– |
பேசப்பெறாதவர்களுடைய |
|
பேச்சு |
– |
பேச்சுக்களானவை |
|
என்றும் |
– |
ஒருகாலும் |
|
பேச்சு அல்ல |
– |
பேச்சுக்களாகமாட்டா |
|
கேட்டோம் |
– |
(இதனை நாம் பெரியோர்களிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |
English Translation
The pure one, the Lord of the pure vedas, the Lord residing in beautiful Tiruvali, the Lord who sucked Putana;s poison breast and her life with it, is the adorable Mal. Those who do not worship him and speak about him do not speak at all, so we have heard.
