(1853)
வானை ஆரமு தம்தந்த வள்ளலை
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்
ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே.
பதவுரை
|
வானையார் |
– |
வானுலகத்திலுள்ளார்க்கு |
|
அமுதம் தக்க |
– |
அமுதமெடுத்தளித்த |
|
வள்ளலை |
– |
உதாரனும், |
|
தேனை |
– |
தேன்போல இனியவனும் |
|
ஆனை |
– |
(குவலயாபீடமென்கிற) யானையை |
|
வாட்டி அருளும் |
– |
கொன்றொழித்தவனும் |
|
அமரர்தம் கோனை |
– |
நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை |
|
யாம் |
– |
அடியோம் |
|
நீள் வயல் சேறையில் |
– |
நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில் |
|
கண்டுபோய் |
– |
ஸேவித்து |
|
குடந்தை |
– |
திருக்குடந்தையிலே |
|
சென்று காண்டும் |
– |
போய்ஸேவிப்போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன்னை விரும்பாதே பிரயோஜநாந்தரத்தை விரும்பினவர்கட்கும் திருமேனியைப் போணாதே கடல்கடைந்து அமுதளித்த பரமோதாரனைத் திருச்சேறையிலே ஸேவித்தோம், இனித் திருக்குடந்தையிலே ஸேவிப்போமென்கிறார்.
வானையார் – வானுலகத்தை (இருப்பிடமாக) உடையார் என்றபடி.
English Translation
The benevolent Lord who have ambrosia to the gods. the nectar of devotees, gave us Darshan in Tiruccherai amid fertile fields. He is the Lord of gods, the Lord who killed the elephant easily. Today we shall go and have hid Darshan in Tirukkudandal
