(1851)

(1851)

துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்

பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்

அளப்பி லாரமு தையம ரர்க்கருள்

விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.

 

பதவுரை

துளக்கம் இல் சுடரை

ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும்

அவுணன்

(இரணியனென்னும்) அஸுரனுடைய

உடல்

உடம்பை

பிளக்கும்

பிளந்தொழித்த

மைந்தனை

மிடுக்கையுடையவனும்

அளப்பு இல் ஆர் அமுதை

அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும்

அமரர்க்கு அருள் விளக்கினை

நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை

பேரில்

திருப்பேர் நகரில்

வணங்கிப்போய்

ஸேவித்து

வெள்ளறை

திருவெள்ளறையிலே

சென்று காண்டும்

சென்று தொழுவோம்

 

English Translation

The light-eternal, my prince who tore into Hiranya;s chest, my ambrosia, light of the celestials, the abundant grace, -having worshipped him in Tirupper, we shall go and have thid Darshan in Tiruvellarai today

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top